8/8/09

போலி என்கவுன்டர்: உ.பி. காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு

0 கருத்துகள்
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்கவுன்டரில் தொடர்புடைய காவல்துறையினர் 6 பேருக்கு எதிராக கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தி வந்த, மாநில குற்றப்புலனாய்வுக் காவல்துறையினர், 2 துணை ஆய்வாளர்கள், 4 காவலர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சுல்தான் கோரி என்பவரை ஹரிப்பூர் கிராமத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து சுல்தான் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.