11/8/09

சோஷியல் டெமொக்ரேடிக் பார்டியின் கேரள மாநிலத்தலைவராக வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷரீஃப் தேர்வு

0 கருத்துகள்

கொச்சி:சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் கேரளமாநில கமிட்டி செயல்படத்துவங்கியுள்ளது. மாநிலத்தலைவராக வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷரீஃப் தேர்வுச்செய்யப்பட்டுள்ளார்.
பிற நிர்வாகிகள் வருமாறு:பொதுச்செயலாளர்கள்-அப்துல் மஜீத் ஃபைஸி, எம்.கே.மனோஜ் குமார். துணைத்தலைவர்கள்-டாக்டர்.பி.ஏ.முஹம்மது ஸயீத், பி.கே.கோபிநாதன்.செயலாளர்கள்-வி.டி.இக்ராமுல் ஹக், முவாற்றுப்புழா அஷ்ரஃப் மவ்லவி, பி.கே.ராதா. பொருளாளர் எ.எ.ஷாஃபி மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொச்சியில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் தான் மாநில நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்பட்டனர். தேசிய தலைவர் ஈ.அபூபக்கர், பொதுச்செயலாளர் எ.ஸயீத் ஆகியோர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.