ஆஸம்கர்:பா.ஜ.க எம்.பி ராமகாந்த் யாதவின் ஆதரவாளர்கள் உலமா கவுன்சில் உறுப்பினர்களுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
பூல்பூர் பகுதியில் வாகனத்திற்கு வழி விடுவது சம்பந்தமான தகராறு துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது. குண்டடிப்பட்ட அப்துற்றஹ்மான்(வயது 22) வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணித்தார்.இரண்டு நபர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.உலமா கவுன்சில் கண்வீனர் அமீர் ரஷாதியின் புகாரின் அடிப்படையில் ஆஸம்கர் எம்.பி. ராமகாந்த் யாதவிற்கு எதிராக கொலைவழக்கு பதிவுச்செய்துள்ளதாக A.D.G.P A.K. ஜெயின் கூறினார்.
நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜகதீஷ்பூரில் யாதவின் வாகன அணிவகுப்பு ரஷாதியின் வாகனத்தை முந்த முயன்றபொழுது பிரச்சனை ஆரம்பித்தது.பூல்பூரில் நடைபெறும் உலமா கவுன்சில் கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார் ரஷாதி.தன்னுடைய காரை முந்திச்சென்று போகும் வழியை தடைச்செய்ததோடு தகராறுச்செய்ததாக ரஷாதி அளித்த புகாரில் கூறியுள்ளார்.தகராறு முற்றியதோடு சம்பவ இடத்திற்கு வந்த உலமா கவுன்சில் உறுப்பினர்களுக்கு நேராக பா.ஜ.க எம்.பி யாதவின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.இந்நிகழ்வைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல பாகங்களிலும் வன்முறை நடைபெற்றது.சன்சர்பூர்,ஸராய்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு பிரிவினரும் தீவைப்பும் கல்லெறியும் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ்
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.