12/8/09

இந்தியா, இஸ்ரேல் தனியார் கூட்டுத் தயாரிப்பில் இராணுவ தடவாளங்கள்!

0 கருத்துகள்
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான இராணுவத் தடவாளங்களை இந்தியாவின் டாடா நிறுவனமும், இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான அனைத்து ஆயுதங்களும் கருவிகளும் இதுவரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் தயாரிப்பாகவோ அல்லது அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவோதான் இருந்தது.
இந்த நிலையில் முதல் முறையாக இந்திய- இஸ்ரேல் இருதரப்பு உறவின் கீழ், இந்தியாவின் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமி. நிறுவனமும், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் லிமி. நிறுவனமும் இணைகின்றன. இவ்விரு நிருவனங்களும் இணைந்து நோவா இண்டகரேடட் சிஸ்டம்ஸ் லிமி. என்ற கூட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளன.
இந்த புது நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்காக ஏவுகணைகள், ஆளில்லா உளவு விமானம், இராடார்கள், மின்னனு போர்க் கருவிகள், உள்நாட்டு பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோவா இண்டகரேடட் சிஸ்டம்ஸ் லிமி. நிறுவனத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் டாடா நிறுவனத்தின் சார்பாக ரத்தன் என் டாடாவும், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் இட்சாக் நிஸ்ஸானும் கையெழுத்திட்டுள்ளனர்.
source: webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.