10/8/09

ஈரானில் கலவரத்தை தூண்டிய குற்றத்தை பிரஞ்சு நாட்டு பெண்மணி ஒப்புக்கொண்டார்

0 கருத்துகள்
தெஹ்ரான்:அதிபர் தேர்தலைத்தொடர்ந்து ஈரானில் கலவரத்தை உருவாக்க முயற்சித்த குற்றத்தை பிரான்சு நாட்டைச்சார்ந்த பெண்மணியும், பிரிட்டன் பிரான்சு தூதரக அதிகாரிகளும் நீதிமன்றத்தின் முன்பாக ஒப்புக்கொண்டனர்.
கலவரத்தை உருவாக்க சதியாலோசனை நடத்தியதற்கான வழக்கில் முக்கிய தலைவர்கள் உட்பட 100 க்கும் அதிகமான நபர்களின் மீதான வழக்கு விசாரணை கடந்த வாரம் தெஹ்ரான் நீதிமன்றத்தில் ஆரம்பித்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டது வற்புறுத்தலின் பேரிலும் இட்டுக்கட்டப்பட்டதும்தான் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இவ்வழக்கு விசாரணையை ஐரோப்பிய யூனியன் கண்டித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு எதிராக பிரான்சும், பிரிட்டனும் களமிறங்கியுள்ளன. தெஹ்ரான் ரெவெலூசனரி நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாம் கட்ட விசாரணையின் போதுதான் பிரான்சு நாட்டைச்சார்ந்த ஆசிரியையான பெண்மணியும், தூதரக அதிகாரிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதிபர் தேர்தலைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் மேற்கத்திய சக்திகள் தீட்டிய சதித்திட்டம் என ஈரான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. பிரிட்டனும், அமெரிக்காவும் கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
பிரான்சு நாட்டு தூதரக அதிகாரியான நஸாக் அஃப்ஸர் கண்ணீருடன் நீதிபதிக்கு முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். உளவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சகோதரர்கள்தான் தன்னை தவறான முறையில் புரியவைத்ததாக கூறினார். ஈரானில் கலவரத்தை தூண்ட அமெரிக்காவும், பிரிட்டனும் அதிகளவில் பணம் பட்டுவாடாச்செய்ததாக பிரிட்டன் தூதரகத்தில் அரசியல் விமர்சகராகயிருந்த‌ ஹுசைன் ரஸ்ஸாம் ஒப்புக்கொண்டார். ஹுசைன் ரஸ்ஸாம் தேர்தலுக்கு முன்பாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஹுசைன் மூஸாவியை சந்தித்திருந்தார்.

செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.