10/8/09

ஓவர் டோஸ் புரோபஃபாலே ஜாக்சனின் மரணத்திற்குக் காரணம் - மருத்துவ அறிக்கை

0 கருத்துகள்
மைக்கேல் ஜாக்சனுக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபஃபால் அதிக அளவில் தரப்பட்டதே அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று ஜாக்சனின் மருத்துவ சோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜாக்சனின் மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய டாக்சிகாலஜி சோதனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த சோதனை அறிக்கை முடிவுகள் தற்போது லீக் ஆகியுள்ளது.
இதை டிஎம்இசட்.காம் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், அபாயகரமான மயக்க மருந்தான புரோபஃபால் ஜாக்சனுக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே ஜாக்சனின் மரணத்திற்கு முக்கிய காரணாமாக இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. அதிலும் புரோபஃபால் அதிக அளவில் செலுத்தப்பட்டதே மரணத்திற்கு்க காரணம் என்று கூறப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரபோஃபால் கொடுக்கப்பட்டதே ஜாக்சன் மரணத்திற்குக் காரணம் என்பது நிரூபணமானால், ஜாக்சனுடன் கடைசி நேரத்தில் உடன் இருந்த டாக்டர் கான்ராட் முர்ரே சிக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.