6/9/09

மோடி அரசால் அநியாயமாக 5 வருடம் சிறைவாசம் அனுபவித்த மவ்லான நஸீருத்தினுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு.

0 கருத்துகள்
குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவைத்ததாக குற்றஞ்சுமத்தி 5 வருடமாக கொடூரமான முறையில் மோடி அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹைதராபாத்தைச்சார்ந்த மவ்லான நஸீருதீனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மோடி அரசின் இத்தகைய அநீதத்தை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.கடந்த 7 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு நிலுவையிலிருந்தது.3 முறை நீதிமன்றம் மோடி அரசை பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டபிறகும் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

(செப்.5) உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.உச்சநீதிமன்றத்தின் எண்.9 இல் நடைபெற்ற விசாரணையை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் அசோக் குமார் கங்கூலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் மேற்க்கொண்டது.

மவ்லானாவிற்காக வாதாடிய வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் வாதாடுகையில்,”குஜராத் அரசு தொடர்ந்து இவ்வழக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவிற்கு மறுத்துவருகிறது,இது ஜாமீன் வழங்குவதற்கு பெருந்தடையாக இருக்கிறது.குஜராத் அரசின் இந்நடவடிக்கை ஒரு இந்தியபிரஜைக்கான உரிமையை மறுப்பதாகும். மேலும் குஜராத் அரசால் மவ்லானா சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிப்பிற்கு சதி திட்டம் தீட்டினார் என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. 2006 ஆம் ஆண்டே இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசிற்கு வழிகாட்டுதல் வழங்கியும் அதனை நிறைவேற்ற குஜராத் அரசால் நிறைவேற்ற இயலவில்லை.மேலும் அடிக்கடி அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்படுவதால் இவ்வழக்கு விரைவில் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.” என்று கூறிய ஜெய்ஸ்வால் மவ்லானாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறி டுமையாக எதிர்ப்புதெரிவித்தார் குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர்.ஆனால் இவ்விஷயத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொண்ட நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்,”ஏற்கனவே 6 வருடங்கள் விசாரணை இல்லாமலே கழிந்துவிட்டது.அவருடைய வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் நீங்கள் அவருடைய வாழ்நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டுதான் வெளியே விடுவிப்பீர்கள் போலுள்ளது”.என்று கூறினார். தீவிரவாதத்தின் பெயரால் நிர்கதியாக்கப்பட்ட குடும்பம்

மவ்லானா நஸீருதீன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச்செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட் மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்கியதற்கு “இது பிற கைதிகளுக்கும் ஜாமீன் மனு சமர்ப்பிக்க முன்னுதாரணம் ஆகிவிடும்”என்று குஜராத் அரசு வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள்,”நீதிமன்றம் மூடப்பட்டால் என்ன ஆகும்” என்று கேள்வியை விடுத்தார்கள்.

இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற ஹைதரபாத்தை தலைமையிடமாக்க்கொண்ட சிவில் லிபர்டீஸ் கண்காணிப்புகுழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மதுகான் twocircles என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில்,”இத்தீர்ப்பு மவ்லானாவின் குடும்பத்திற்கு நிம்மதியைதரும். குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான நம்பிக்கையைத்தருவது உச்சநீதிமன்றம்தான்.மேலும் முஸ்லிம்களுக்கு குஜராத் நீதிமன்றங்களில் நீதிகிடைக்காது”என்று கூறினார்.

மவ்லானாவின் மகன்கள் 3 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தபடுத்தப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்பொருமுறை மவ்லானாவின் மனைவியை பேட்டிக்கண்டபொழுது உள்ளூர் காவல்துறையினர் உன்னுடைய மகன்கள் வளரும்போது வழக்கில் சிக்கவைப்போம் என்று மிரட்டியதாக கூறியதை நினைவுக்கூர்ந்தார் லத்தீஃப்.

செய்தி:Twocircles.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.