6/9/09

துபாய் 13-வது புனித குர்ஆன் விருது நிகழ்ச்சியில் சிறந்த இஸ்லாமிய ஆளுமைத்தன்மைக்கான(Islamic Personality)விருது பெறும் முராத் ஹோப்மென்.

0 கருத்துகள்
துபாய் புனித குர்ஆன் விருது நிகழ்ச்சி 13 வது முறையாக துபையில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் சிறந்த இஸ்லாமிய ஆளுமைத்தன்மை மிக்க ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் அமீரக திர்ஹம் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாண்டு இஸ்லாமிய ஆளுமைத்தன்மைக்கான விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் முராத் ஹோப்மேன். இவர் ஜெர்மனியை பூர்வீகமாக கொண்டவர்.கத்தோலிக்க கிறிஸ்தவராகயிருந்த ஹோப்மேன் 1980 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.இவர் இஸ்லாத்தை தழுவியது அக்காலக்கட்டத்தில் மேற்கத்திய உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
முராத் ஹோப்மென் சிறந்த எழுத்தாளர்.மேலும் 1961 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டுவரை ஜெர்மன் நாட்டின் தூதராக பணியாற்றியவர். இவர் எழுதிய பிரபலமான நூல் “மக்கா மற்றும் இஸ்லாத்தை நோக்கிய பயணம்:ஒரு மாற்றீடு”(Journey to Makkah and Islam:The Alternative). மேலும் இஸ்லாத்தை பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் ஹோப்மென்.


கிறிஸ்தவமதத்தலைவர்களுக்கு முஸ்லிம் அறிஞர்களால் அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு எழுதப்பட்ட “எங்களுக்கும் உங்களுக்குமிடையேயான பொதுவான வார்த்தை”(A Common Word Between Us and You”)என்ற கடித்த்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர் ஹோப்மென். தற்போது துருக்கியில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.மேலும் இவர் ஜெர்மனி மத்திய முஸ்லிம் கவுன்சிலின் கெளரவ ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

நமது செய்தியாளர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.