5/9/09

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை நடத்திய கூட்டுக்கொலை

1 கருத்துகள்
காபூல்:தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் சிவிலியன்கள் உள்பட 90 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இரண்டு எண்ணெய் டாங்குகளை கடத்திச்சென்ற தலிபான் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் நேட்டோ அறிவித்துள்ளது. மரணித்தவர்களில் சிவிலியன்களும் உண்டு என்பதை நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது. கொலைச்செய்யப்பட்ட 90 க்கும் அதிமானோரில் சாதாரண மக்கள்(சிவிலியன்கள்) 50 க்கும் மேற்பட்டோர் என்று ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். மரண எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்புள்ளது.
குண்டூஸ் மாகாணத்திலிலுள்ள உமர் கேல் கிராமத்தில் நேட்டோ படையினருக்கு எண்ணெய் கொண்டுசென்ற இரண்டு டாங்கர்களை போராளிகள் கைப்பற்றினர். பின்னர் அந்த டாங்கர்களை நதிக்கருகில் நிறுத்தியபொழுதுதான் நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடத்தின.இச்சமயம் போராளிகளிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு வந்த சாதாரணமக்களை நேட்டோ படை கூட்டுக்கொலைச்செய்தது. எண்ணெய் டாங்கர்களில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலினால் தீப்பிடித்து பெருமளவிலான தீ பரவியதால் கடுமையான ஆள்சேதம் ஏற்பட்டது. குண்டூஸ் மாகாணத்தில் தாலிபான் தலைவர் அப்துற்றஹ்மான், சில தலிபான் தலைவர்கள், 4 செச்னிய போராளிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அம்மாகாண கவர்னர் முஹம்மது ஒமார் கூறினார். 90 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.நேட்டோ படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலிலும், அதனால் டாங்கர்கள் தீப்பிடித்ததிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக அலி அபாத் மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
கடந்த மே மாதத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் 140 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த வருடம் பகுதி முடிவடைந்தபோது 100க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்குமேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அதேவேளையில் மத்திய ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் ராணுவத்தினர் 13 தலிபான் போராளிகளை கொலைச்செய்ததாக ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1 கருத்துகள்:

  • 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:32

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    கீழே தரப்பட்டுள்ள லிங்கிற்கு சென்று 'சிறந்த பத்து பேர்' யார் என்ற கேள்விக்கு, உலகம் அழியும் வரை சிறந்தவரான நமது ஒரே தலைவர் ரசூல்[ஸல்] அவர்களுக்கு உங்களின் வாக்கை செலுத்துங்கள். இதை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.


    Dear all

    a website bestofmen.org is having a vote on who is the best of men and the 10 ppl list includes gandhi, jesus, muhammed, pope, einstein etc ..i request you to go to www.bestofmen. org and pls show the world we have the best man.

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.