5/9/09

ஜஸ்வந்த் புத்தகத்துக்கு மோடி விதித்த தடை நீக்கம்

0 கருத்துகள்
அகமதாபாத்: ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்திற்கு குஜராத் அரசு விதித்த தடையை நீக்கி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தகத்தை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
ஜின்னா குறித்து சமீபத்தில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது புத்தகத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை தரக்குறைவாக எழுதியிருப்பதாகவும், அது தேச ஒற்றுமையை குலைத்து விடும் என்று கூறி அந்த புத்தக விற்பனைக்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி தடை விதித்தார்.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் வழக்கு தொடர்ந்தார். அதை நீதிபதி கேஎஸ் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூவர் பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் தடையை ரத்து செய்து இன்று அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
புத்தக விற்பனை மீது விதிக்கப்பட்டுள்ள தடை அடிப்படை உரிமைகளை தடுக்கும் வகையில் இருக்கிறது. இந்த புத்தகம் எந்த வகையில் தேச நலனையும், ஒற்றுமையையும் பாதிக்கும் என்பதை அரசு விதித்த தடை நோட்டீஸ் விளக்கவில்லை. தடை உத்தரவு வழங்கும் முன் அரசு சரியாக ஆலோசிக்கவில்லை என நீதிமன்றம் கருதுகிறது. புத்தக விற்பனை மீதான தடையை நீக்க உத்தரவிடுகிறது. அதே நேரத்தில் மாநில அரசு புதிய நோட்டீஸ் அனுப்ப விரும்பினால் அதை செய்யலாம் என்று கூறினர்.

தீர்ப்பு குறித்து ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் திரில்லாக இருக்கிறது. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. புத்தக விற்பனைக்காக இனி யாரும் நீதிமன்றம் போக வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது. நான் யாரை பற்றியும் தவறாக கூறவில்லை என்றார்.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.