2/9/09

தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு

0 கருத்துகள்
தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு பாட்னா: பாஜக தலைவர்கள் செய்த பாவம்தான் இன்று அக்கட்சி சீரழிய காரணம் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் கலவரம் நடத்தியது, நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவினர் செய்த கலவரங்கள் ஆகியவற்றால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.
மக்கள் விட்ட சாபமும், தலைவர்கள் செய்த பாவமும்தான் இன்று பாஜக இந்த நிலைக்கு சீரழிந்து போக காரணம். இந்த பாவத்தால் விரைவில் பாஜக அழிந்தே போகும். அக்கட்சியின் தலைவர்கள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்காமல் காத்தவர் அத்வானிதான். இதை நான் அன்றும் சொன்னேன். மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இப்போது அத்வானியின் நிலையைப் பாருங்கள். விதியின் சாபம் இப்போது அவர் மீதே வந்து விடிந்துள்ளது. பாஜக தலைவர்கள் நாட்டுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றார் லாலு.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.