புதுடெல்லி:ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு தடைவிதித்த குஜராத் மோடி அரசின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
இந்தியா-பாக். பிரிவினைக்கு முஹம்மது அலி ஜின்னா மட்டும் காரணமில்லை எனவும், ஜவஹர்லால் நேருவும்,சர்தார் வல்லபாய் பட்டேலும் இதற்கு காரணமானவர்கள் என்று கூறி ஜின்னா-இந்தியா-பிரிவினை-சுதந்திரம் என்ற நூலை வெளியிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை புத்தகத்தை காரணம் காட்டி பாரதீய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தது.
புத்தகம் வெளியிடப்பட்டு இரண்டு தினங்களுக்குள் குஜராத்தின் மோடி அரசு புத்தகத்திற்கு தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்கள் அந்நூலின் ஆசிரியரான ஜஸ்வந்த் சிங்கும் வெளியீட்டாளரான ரூபா அண்ட் கம்பெனியும். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சிரியாக் தாமஸ் மற்றும் ஆல்ட் மாஸ் கபீர் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் புத்தகத்திற்கு தடை விதித்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இவ்வழக்கில் பிரபல வழக்கறிஞர் எஸ். நரிமான் ஆஜரானார்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.