2/9/09

தூதின் ரமலான் சிந்தனைகள்

0 கருத்துகள்
"என் அறியாமைக்காலத்தில் நான் ஏராளமான நூல்களைப் படித்துள்ளேன். புராதன புதிய தத்துவங்கள், விஞ்ஞானம், அரசியல், மனித வாழ்வு என்பன பற்றிய ஒரு நூல் நிலையமே என் மூளைக்குள் அமைந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நூல்களைப்படித்துவைத்தேன். ஆனால் என்று நான் என் கண்களைத்திறந்து குர் ஆனைப்படிக்கத்தொடங்கினேனோ அன்றுதான் அதற்கு முன்னர் படித்தவைகள் அனைத்தும் குறையுள்ளவை என்பதை உணரலானேன்.
காண்ட்(Kant 1724-1804) ஹைக‌ல்(Hegal 1770-1831)நீஷே(Nietzshe 1844- 1890)கார்ல் மார்க்ஸ்(Karl Marx 1818-1883)போன்ற பெரும் பெரும் மேதாவிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் இப்பொழுது பச்சிளம் குழந்தைகள் போன்று தோற்றம் தருகின்றனர்! அவர்கள் மீது இப்பொழுது எனக்கு அனுதாபமே ஏற்படுகின்றது;பாவம்.வாழ்க்கை முழுவதும் எந்த இருட்குகைகளை ஒளி மயமாக்கவென இரவு பகலாய் பாடுபட்டார்களோ. எந்த பிரச்சனைகளை தீர்க்கவென பெரும் பெரும் நூல்களை எழுதி வைத்தார்களோ, அவற்றை தீர்த்துவைத்து உலகை ஒளிமயமாக்கும் கருத்துகளை இவ்வேதப்பெருநூல் ஓரிரு வரிகளில் தந்துவிடுகின்றது. இந்த அரிய நூலை படிக்கும் வாய்ப்பை நான் பெறாதிருந்திருப்பின் என் நிலையும் மேற்காணும் மேதாவிகளின் நிலையாகவே இருந்திருக்கும்.நானும் குழம்பிப்போய் வாழ்நாளை கழித்திருப்பேன்.
வாழ்த்துக்குரியது;என் வாழ்வை மாற்றியமைத்த இவ்வேத நூல்!போற்றுதற்கிரியது;விலங்கின வாழ்விலிருந்து என்னை மனிதனாக்கிய இப்புனித நூல்!ஏழை என் நன்றிக்குரியது;இருட்குகையிலிருந்து ஒளிப்பூங்காவுக்கு என்னைக் கொணர்ந்த இவ்விறை நூல்! அல்குர் ஆன் எனக்கு அருளியிருக்கும் ஒளியின் துணைக்கொன்டு, வாழ்வின் எந்த பிரச்சனை மீது நான் கருத்தை செலுத்தினாலும் அப்பிரச்சனைக்கான அழகிய தீர்வு எத்தகைய திரையுமின்றி தெளிவாகக் கிடைத்து விடுகின்றது.
எல்லா வகையான பூட்டுகளையும் திறக்கும் திறவுக்கோலுக்கு ஆங்கிலத்தில் "மாஸ்டர் கீ"(Master Key) என்று சொல்வார்கள்.அது போன்று வாழ்வின் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளாயினும் அவற்றை தீர்த்து வைத்து அமைதியை தரும் "மாஸ்டர் புக்"(Master Book)குர் ஆன் என்று நான் கூறுவேன்!"
கூறிய‌வ‌ர்:அல்குர் ஆனுக்குத்"த‌ஃப்ஹீமுல் குர் ஆன்" என்ற‌ பெய‌ரில் அழ‌கிய‌ விள‌க்க‌ உரை எழுதிய‌ மெள‌லான‌ செய்யித் அபுல் அஃலா மெள‌தூதி (ர‌ஹ்...)அவ‌ர்க‌ள்.
வ‌ழிகாட்டி மாசிகை ‍ இல‌ங்கை ஜ‌மாத்தே இஸ்லாமி வெளியீடு, 1961 ஜுலை மாத‌ இத‌ழ்

ந‌ன்றி:உங்க‌ள் இத‌ய‌த்துட‌ன் இஸ்லாம் பேசுகின்ற‌து, இல‌க்கிய‌ சோலை வெளியீடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.