2/9/09

ஓமான்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக நடைபெற்ற சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும்

0 கருத்துகள்

மஸ்கட்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக வருடந்தோறும் நடைபெற்றுவரும் சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும் கடந்த வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 28)அன்று மஸ்கட்டிலிலுள்ள ரூவி அல்மாஸா ஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
ஓமானில் வசிக்கும் 2000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் கலந்துக்கொண்டனர். இஃப்தாருக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகங்கள் மற்றும் சிடிகளுக்காக தனியாக மீடியா கார்னரும் அமைக்கப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் சகோதரர்.நாஸருதீன் எழமரம் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பெருந்துயரம் இஸ்ரேலுடனான இந்திய உறவு. அதன் பிறகுதான் இந்தியாவில் பல இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்பின் பெயரிலும்,தீவிரவாதத்தின் பெயரிலும் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்படுகின்றனர். மலேகான் குண்டுவெடிப்பின் மூலம் இது ஒரு முடிவுக்கு வந்தது. மலேகான் குண்டுவெடிப்பின் உண்மைகளை வெளிப்படுத்திய ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டதில் சந்தேகங்கள் உள்ளன. 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைப்பற்றியும் மத்திய அரசு ஒரு தீவிர விசாரணையை மேற்க்கொண்டு உண்மைகளை வெளிக்கொணரவேண்டும்". இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
தமிழ்,மலையாளம்,உருது மொழிகளில் முறையே முஹம்மது இஸ்மாயீல்,பதருத்தீன் பாகவி,தவ்ஃபீக் அஹ்மத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.ஃபெடர்னிடி ஃபாரம் தலைவர் டி.பி.அப்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்த வி.எ.சுக்கூர் நன்றியுரை நவின்றார்.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.