விபத்தில் மரணமடைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் தலைமை செயலர் சுப்பிரணமியன், தலைமை பாதுகாப்பு அலுவலவர் ஏ.எஸ்.சி., வெஸ்லி, பைலட் எஸ்.கே., பாட்டியா, துணை பைலட் எம்.எஸ்.ரெட்டி. ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேத பரிசோதனை செய்வதற்காக 5 பேரின் உடல்களும் இன்று மதியம் 2 மணிக்கு கர்னூல் கொண்டுவரப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்தததும் 5 பேரின் உடல்களும் மாலை 5 மணி அளவில் ஐதராபாத் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜசேகர ரெட்டியின் மரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹைதராபாத் விரைந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் இறந்த செய்தியால் ஆந்திர மாநில மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்டி மரணம் : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.