9/9/09

மதமாற்றம் : முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக வாக்குமூலம் அளிக்க மாணவிகள் மறுப்பு

0 கருத்துகள்

பத்தணம்திட்டை: கேரள மாநிலம் பத்தணம்திட்டை என்ற இடத்திலுள்ள செண்ட் ஜான்ஸ் கல்லூரியில் கடைசிவருடம் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் இஸ்லாத்தை தழுவியதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்க திட்டமிட்ட சில அதிகாரிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

குற்றம்சுமத்தப்பட்ட ஷஹன்ஷாவும்,சிராஜுதீனும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபொழுது இருவரும் செய்த குற்றம் என்ன என்று மாணவிகளோடு நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு மாணவிகள் எந்த பதிலும் கூறாது மெளனம் சாதித்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜரான இளைஞர்களுக்கு தீவிரவாதத்தொடர்பு இருப்பதாகவும் அதைப்பற்றி அரசு விசாரித்துவருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அன்ஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று மாணவிகள் மெளனம் சாதித்ததால் அரசுதரப்பு மற்றும் காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட மலையாள மனோராமாவின் செயலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மாணவிகளை பயமுறுத்தி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் சில முக்கிய போலீஸ் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவரும் செயல்படுவதாக ஏற்கனவே தேஜஸ் செய்தி வெளியிட்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றம் சுமத்தி கட்டாயமதமாற்றம் செய்ததாக பொய்வழக்கு போடுவதற்கு காவல்துறை முயற்சி எடுத்தது. இதற்கு உதவியாக சில பத்திரிகைகளும் பொய்க்கதைகளை கிளப்பிவிட்டன.

கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கர என்ற இடத்திலிலுள்ள கழியோத் பங்களாவில் பினோ ஜேக்கப், திருவனந்தபுரம் பேரூர்கடை என்ற இடத்திலிலுள்ள இந்திரா நிவாஸில் வசிக்கும் மிதுலா ஆகிய மாணவிகள்தான் இஸ்லாத்தை பற்றி சுயமாக படித்த பிறகு இஸ்லாத்தை மனப்பூர்வமாக தங்கள் வாழ்க்கைநெறியாக்க தயாரானார்கள்.

இதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவரான ஷாஹன்ஷாவுடனான நட்பு இஸ்லாத்தை குறித்து அதிகமறிய இவர்களுக்கு உதவியது. தொடர்ந்து தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்ய இவர்கள் முயன்றபொழுதுதான் இவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பயமுறுத்தி பலாத்காரமான முறையில் அழைத்துச்சென்றனர்.

மிதுலாவின் உறவினரான பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரின் தலையீடும், மாணவிகளின் உறவினரான ஐ.ஜி.ராங்கிலிலுள்ள போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரி ஆகியோரின் தலையீட்டினாலும் இச்சம்பவம் சர்ச்சையானது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.