9/9/09

தேசிய மகளிர் முன்னணி (National Womens Front) ஏர்வாடி கிளை நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

1 கருத்துகள்

பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஜம்மியத்துன் நிஸா என்ற முஸ்லிம் பெண்கள் அமைப்பு பல்வேறு சமூக கலாச்சார பணிகளை செய்து வந்தது தற்போது ஜம்மியத்துன் நிஸாவும் கேரளா மற்றும் கர்நாடகாவில் இயங்கி வந்த (KWF) என்ற மகளிர் அமைப்புகளோடு இனைந்து தேசிய மகளிர் முன்னணி(National Women’s Front) என்ற பெயரில் ஒரே அமைப்பாக தற்போது இயங்கி வருகிறது இன்னும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பை தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த
அமைப்பின் ஏர்வாடி கிளை சார்பாக பெண்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் வகையில் ஏர்வாடி 6 வது தெரு மைதானத்தில் 06-09-09 அன்று மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு
மாநில தேசிய மகளிர் முன்னணியின் தலைவி S.பாத்திமா ஆலிமா தலைமை தங்கினார். 4வது தெருவை சார்ந்த சகோதரி மும்தாஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஏர்வாடி கிளை பொறுப்பாளர் சகோதரி ஸைபுன்னிசா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில செயலாளர் பாத்திமா கனி (மதுரை) சிறப்புரை ஆற்றினார். ஏர்வாடி அல் ஹூதா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் மும்தாஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து உரை ஆற்றினார்.தாருல் ஹிக்மா பெண்கள் அறிவகத்தின் ஆசிரியை ஆயிசா நிசாராவின் நன்றி உரைக்கு பின் கழந்து கொண்ட அனைவரும் நோன்பு திறந்தனர்.இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் சகோதரத்துவ வஞ்சையுடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.

செய்தி
: நமது செய்தியாளர்

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.