10/9/09

போலி என்கவுண்டர்:காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை தேவை:இஷ்ரத் குடும்பத்தினர் கோரிக்கை

0 கருத்துகள்
மும்பை: 2004 ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை சுட்டுகொன்றது போலி என்கவுண்டர் என்று நீதி மன்ற விசாரணை கூறிய சூழலில் குற்றவாளிகளான காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இர்ஷத் ஜஹானின் குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.

இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் லஷ்கர்--தய்யிபா தீவிரவாதிகள் என்றும் அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல முயன்றார்கள் என்றும் கூறும் குஜராத் அரசின் கூற்று முற்றிலும் தவறானது என்று இஷ்ரத்தின் தாயார் தங்களை தீவிரவாதிகளாக கருதுவதற்கு காரணமானதாகவும் இதனால் தனது பிற பிள்ளைகளின் படிப்பையும், வேலையையும் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இஷ்ரத் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தாங்கள் முயற்சி எடுத்துவருவதாக இஷ்ரத்தின் சகோதரி நுஷ்ரத் கூறினார். தனது சகோதரி ஒருபோதும் தீவிரவாதியாக இருக்கவில்லை. தற்போது நீதிமன்றம் அதனை தெளிவுப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக்கொடூரத்தை நிகழ்த்திய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அவர் கூறினார்.

அதேவேளையில் நீதிபதி தமாங்கின் அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக குஜராத் அரசு செய்தியாளர் ஜெயநாராயணன் கூறினார். மேலும் இவ்வறிக்கை சட்டப்பூர்வமாக சரியல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழுவை மீறி நீதிபதி தமாங் இவ்வறிக்கையை சமர்ப்பித்ததாகவும் கூறினார் அவர்.

இந்நிகழ்வு மனித தன்மையற்ற செயல் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி டெல்லியில் தெரிவித்தார். இது சம்பந்தமாக தீவிரவிசாரணை நடத்தினால் உண்மைகள் வெளியே வரும் என்றும், இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே நிகழ்வது அற்புதத்தை ஏற்படுத்துவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் வீரப்பமொய்லி கூறினார். போலி என்கவுண்டர் படுகொலைகளில் குஜராத் அரசின் பங்கு வெளியான சூழலில் நரேந்திரமோடி ராஜினாமா செய்யவேண்டும் என்று சி.பி.எம்.பொலிட் பீரோ தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.