4/10/09

ஃபலஸ்தீன் பெண் கைதிகள் 19 பேர் விடுதலை

0 கருத்துகள்
ஹமாஸால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வீரன் ஒருவன் உயிரோடு உள்ளான் என்பதற்கு ஆதாரமான வீடியோ டேப்பிற்கு பதிலாக 19 ஃபலஸ்தீன் பெண் கைதிகளை விடுதலை செய்தது இஸ்ரேல்.மேலும் ஒரு பெண் இன்று (ஞாயிறு) விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 18 பெண்கள் மேற்குக்கரை பகுதியை ரெட் கிராஸின் வாகனத்தில் சென்று அடைந்தனர். மற்றுமொரு பெண் ரெட் கிராஸ் வாகனத்தில் காசா பகுதியை வந்து அடைந்தார். அந்த பெண்களின் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகத்தில் அவர்களை வரவேற்றனர்.
இஸ்ரேலியர்கள் இதற்கு பதிலாக ஜிலாட் சாலித் என்ற ஹமாஸால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய வீரனின் வீடியோ ஒன்றை பெற்றுக்கொண்டது. இவனை ஹமாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு கைது செய்தது. ஒரு தகவலின் படி இஸ்ரேல் ஏறத்தாழ 10000 ஃபலஸ்தீனியர்களை கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
ஹமாஸ் ஷாலிதின் விடுதலைக்கு பதிலாக 100க்கும் மேற்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனிய கைதிகளின் விடுதலைக்காக பேச்சு வார்த்தை நடத்திவருகின்றது.
இதனை குறித்து ஃபலஸ்தீன அமைச்சகம் கூறுகையில், "விடுதலை செய்யப்பட்ட 19 பெண்கள் தவிர்த்து இன்னும் 40 பெண்கள் இஸ்ரேலின் சிறையில் வாடி வருகின்றனர்" என்று கூறியுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஃபலஸ்தீன் பெண்ஒருவரை உறவினர் கட்டி தழுவும்காட்சி.

மேலும், "19 ஃபலஸ்தீனிய பெண்கள் விடுதலை செய்யப்பட்ட சந்தோஷம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கண்ணியம் குறைக்கப்பட்டு சிறையில் அவர்களுடைய அத்துமீறல்களால் வாடிக்கொண்டிருக்கும் நம் மற்ற சகோதரிகளை மறக்கடித்து விட வேண்டாம்" என்று அமைச்சகத்தின் தகவல் இயக்குனர் ரியாத் அல் அஸ்கர் கூறினார்.

அஸ்கர் மேலும் கூறுகையில், "ஸமாஹ் சமதாஹ் என்ற சிறுமியை தவிர பெரும்பாலான சிறுமிகள் இந்த பரிமாற்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கடந்த 2008 ல் கடத்திச்செல்லப்பட்டவர். இவருக்கு இஸ்ரேல் ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்தது.

இன்னும் சில பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அதில் அஹ்லம் அல் தமிமி என்ற பெண்ணிற்கு 16 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சிறையிலிருக்கும் பெண் கைதிகளில் 12 பேர் நோயாளிகள் என்றும், அமல் சுமா என்ற பெண் சிறுநீரக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் மற்றும், வாஃபா என்ற பெண் இஸ்ரேலிய இராணுவத்தினால் கடத்திச்செல்லபடும்பொது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

2007 - 2008 ல் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பலஸ்தீனிய பெண்களில் 13% பேர் 18 வயதிற்கு கீழானவர்கள் என்றும் 56% பேர் 20 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் ஒரு செய்தி கூறுகின்றது. இவர்கள் கைது செய்யப்படும் போது, அடிக்கப்படுதல், அவமானப்படுத்தப்படுதல், பயமுறுத்துதல், பாலியல் வன்முறை, அவமதிப்பு உக்திகள் ஆகியவைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் உள்ளாக்கப்படுகிறார்கள்.

source: ABNA,Thapalpetti

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.