இந்த கேப்டன் R.K.ஷர்மா தலைமையிலான ஒரு தேசிய பாதுகாப்பு படை பிரிவு ஹோட்டல் ஓபராயில் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றதாக சிறப்பு நீதி மன்றத்திடம் ஒரு சாட்சி கூறியுள்ளார்.
நீதி மன்றம் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த கேப்டன் ஷர்மாவை நீதி மன்றத்திற்கு அழைத்து இந்த சம்பவம் குறித்து மேலும் விபரங்கள் தருமாறு கோரியது. இந்த கேப்டன் ஷர்மா குறித்து பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் கடம் நீதி மன்றத்தில், தான் கேப்டன் ஷர்மா தலைமை தாங்கிய குழுவில் இருந்ததாகவும், இந்த குழு தான் ஹோட்டல் ஓபராயில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை மும்பையின் குற்றப் பிரிவிடம் தங்களிடம் எந்த ஒரு கேப்டன் ஷர்மாவும் கிடையாது என்று விளக்கமளித்து ஒரு கடிதத்தை சமர்பித்துள்ளது.
இதனை பெற்றுக்கொண்ட நீதிபதி தஹாலியானி இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி ரமேஷ் மகாலேயிடம் அந்த தீவிரவாதியைக் கொன்றது யார் என்று விசாரிக்க ஆணையிட்டார்.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும் ATS இன் முன்னாள் தலைவர் மற்றும் இந்த தாக்குதலில் நம் நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்த ஹேமந்த் கார்கரேவின் மரணம் குறித்தும் நமக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கும் நிலையில் இந்த கேப்டன் ஷர்மா என்ற ஒரு புதிய கதாபாத்திரம் இன்னும் அதிக குழப்பத்தை தருகிறது. இந்த வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா இல்லை வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டை மற்றும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பித்து விடுவார்களா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
source:indian express,thapalpetti
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.