மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.
இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.
இந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன் லோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.
முதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.
இன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
மொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.
தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.
முன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
thatstamil
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.