பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களின் விபரங்களை பதிவுச்செய்வதிலுள்ள இடையூறே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு தடையாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் துபாயில் நடைபெற்ற நேரடி சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கூறினார்.
மேலும் இது வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்டதல்ல எனவும் ஆனாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
துபாய்க்கு சுற்றுபயணம் வந்த அமைச்சரை திருவனந்தபுரம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடுச்செய்திருந்த நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சமீபத்தில் பல்வேறு வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் பலர் வேலைஇழந்து நாடு திரும்புவது கவலையளிப்பதாக சசி தரூர் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் வேலையிழந்தோருக்கு புணர்வாழ்வு திட்டங்களுக்காக கோரிக்கைகள் பல எழுந்தன. இது சம்பந்தமாக தான் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியதாகவும், மேலும் பட்ஜெட்டில் இதற்கான தொகை ஒதுக்கவேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தபொழுது பதிலளித்த நிதியமைச்சர் இதுக்கான நிதி ஒதுக்கக்கூடிய சூழல் ஏற்படவில்லையெனவும், அதற்கான அவசியமும் இல்லையெனக்கூறிய நிதி அமைச்சர், வளைகுடா நாடுகளில் வேலையிழந்து திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களுக்கான புணர்வாழ்வு நிதியை மாநில அரசுகளே ஒதுக்கமுடியும் என்று கூறியதாக சசிதரூர் தெரிவித்தார்.
ஹஜ் செல்லுவோருக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தல்மீஸ் அஹ்மத்,துபாய் இந்திய தூதரக அதிகாரி வேணு ராஜாமணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.பல்வேறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அமைப்பின் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.