8/10/09

சவூதியில் தொலைக்காட்சியில் காம அனுபவங்களைப் பேட்டியளித்தவருக்கு 1000 சவுக்கடி, ஐந்து ஆண்டு சிறை

0 கருத்துகள்
தனது காம சல்லாப அனுபவங்களை வெளிப்படையாய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சவூதி நாட்டைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவருக்கு ஆயிரம் கசையடியும், ஐந்து வருட சிறைத் தண்டனையும் அளித்து சவூதி நாட்டு நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மற்ற மூன்று நபர்களுக்கும், முறைகேடான காம சங்கதிகளை பகிரங்கமாய் பேசியதால் 300 கசையடிகளும் இரண்டு வருட சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
LBC எனப்படும் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் "Bold Red Line" எனப்படும் நிகழ்ச்சியொன்றில் சவூதியைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரின் காம சல்லாப அனுபவங்களின் வெளிப்படையான பேட்டியை ஜூலை 15 ஒளிபரப்பியிருந்தது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சவூதி மக்களிடையே இது பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சவூதி அரேபியாவில் தனிநபர் ஒழுங்கு, மதம் சார்ந்த வரையறைக்குட்பட்டது. உறவுமுறை தொடர்பல்லாத ஆண்களும் பெண்களும் சமமாய் கலந்து பழகவே வரம்புகள் உள்ள நிலையில் இத்தகைய பேட்டி பெருத்த சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் மேற்சொன்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்துல் ஜவாத் சார்பாய் வாதாடிய வழக்கறிஞர் சுலைமான அல் ஜுமை (Sulaiman al-Jumeii) தனது கட்சிக்காரர் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
source:inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.