8/10/09

இஸ்ரேல் மீதான போர் குற்ற நடவடிக்கை நிறுத்தம் : அப்பாசுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

0 கருத்துகள்
காஸா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் ஏராளமான போர்க் குற்றங்கள் புரிந்தது தொடர்பாக இஸ்ரேல் மீது மேற்கொள்ளவிருந்த நடவடிக்கைகளை நிறுத்த ஃபலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அவர் ஒரு பலஸ்தீனியரே அல்ல என்று ஹமாஸ் அப்பாஸை கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது இம்மாத இறுதியில் மேற்குலகால் ஆதரிக்கப்படும் அப்பாஸுக்கும் போராளிகளான ஹமாஸுக்கும் இடையில் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் எனத் தெரிகிறது.
காஸாவில் கடந்த குளிர் காலத்தில் நடைபெற்ற 3 வார போரின் போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரும் போர்க் குற்றங்களை புரிந்ததாக ஐ.நா குழு புகார் கூறியது. எனினும் இரு தரப்பினரும் அதை மறுத்துள்ளனர்.
பாலஸ்தீன அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா மனித உரிமைக் குழு இஸ்ரேலின் போர்க் குற்றங்களை விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது நடவடிக்கைக்காக ஐ.நா பொதுக் குழுவுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டியதற்குப் பதிலாக அப்பாஸின் தலைமையிலான பலஸ்தீன அரசின் கோரிக்கையை ஏற்று ஓட்டெடுப்பை 6 மாதம் தள்ளிப் போட்டுள்ளது.
அப்பாஸின் ஃபதாஹ் இயக்கத்தை சார்ந்த சட்டப் பிரதிநிதி அப்துல்லா இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது சில நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது அமெரிக்க அராசாங்கத்தின் நெருக்குதலால் எடுக்கப்பட்ட முடிவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த வாரம் போர்க் குற்றம் தொடர்பாக இஸ்ரேல் மீது எடுக்கப்படும் எவ்வித நடவடிக்கையையும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.அப்பாஸின் இம்முடிவு பலஸ்தீன மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பாஸ் மேற்கொள்ளவிருந்த சிரியா பயணத்தை ஒத்தி வைக்குமாறு சிரியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து காஸாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூது ஜாஹர் “இனியும் அப்பாஸை பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாகக் கருதமுடியாது. பலஸ்தீனராகக்கூட அவரைக் கருத முடியாது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
source:inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.