13/10/09

ஜனநாயக தூண்களே சற்று சிந்திப்பீர்!

0 கருத்துகள்
நம் இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஒவ்வொரு துறையும் தத்தமது கடமைகளை சரிவர செய்திருக்குமேயானால் இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால் ஒவ்வொரு துறையும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
நாடாளுமன்றம்:
நாடாளுமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் களையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் தற்போது மிகவும் அற்பமாகவே காணப்படுகிறது. சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளூமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருமானத்தினை சட்டப்பூர்வமாக பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.
அரசு நிர்வாகம்:
இதில் மிகப்பெரிய வேடிக்கைதான் அரங்கேறுகிறது. மத்திய அரசு அதிகாரம் வாய்ந்ததா? இல்லை மாநில அரசுகள் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் அரசுகளூம் குழம்புகின்றன மக்களையும் குழப்புகின்றன. இருவருக்கும் உள்ள மிகபெரிய உடன்படிக்கையானது மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கினை மாநில அரசுகள் கண்டுக்கொள்ளக்கூடாது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப்பயிற்சியை தடுக்க மறுப்பது உட்பட அதுபோல் மாநில அரசுகளின் முஸ்லிம் விரோத போக்கினை மத்திய அரசு அலுவல்ரீதியாக கேள்விக்கேட்கக்கூடாது மாநில அரசுகள் அரங்கேற்றும் போலி என்கெளன்டர்கள் உட்பட.
இந்த அதிகாரபூர்வமற்ற உடன்படிக்கையை இரு அரசுகளும் தீவிரமாக கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய பெண்களின் கற்பினை சூரையாடுவதையும், இஸ்லாமிய பச்சிளங்குழந்தைகளின் இரத்ததினை உறுஞ்சுவதையுமே தங்களது அரசின் கொள்கைகளாக கடைப்பிடித்துவரும் அமெரிக்காவிற்கும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலிற்கு காவடி தூக்கும் மத்திய அரசின் இஸ்லாமிய விரோத வெளியுறவுக்கொள்கை குறித்து எந்த மாநில அரசுகளும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோல் உலக வரலாறு கண்டிராத கொடூரமான இஸ்லாமியர்களுக்கெதிரான படுகொலையையின் போதும் அதனை அரங்கேற்றியது நரவேட்டை நரேந்திர மோடி தலைமையிலான கும்பல்களே என பல விசாரனை அறிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டிய போதும் கண்டுக்கொள்ளாதது போல் இருப்பதற்கும் அதிகாரபூர்வமற்ற இவ்வுடன் படிக்கையே காரணமாக இருக்கிறது. இதன் மீதும் கேள்விகள் தொடுப்பது பயனளிக்காது.
ஊடகத்துறை:
வருமானம், மேலும் வருமானம், மேலும் மேலும் வருமானம் இதுவே தற்போதைய ஊடகத்துறையின் தாரக மந்திரம். சமுதாய நலன், சத்தியம், நேர்மை போன்ற ஊடகத்துறைக்கு தேவையான முக்கிய காரணிகளை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மறந்துவிட்டன. மறுத்துவிட்டன. விறுவிறுப்புகளையும், சாதாரண மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதைனைகளை வியாபாரமாக்குவது, நடிகைகளைப்பற்றி ஆல அமர விவாதிப்பது, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களூகெதிராக அவதூறுகளை பரப்புவது இவையே நவீன கால ஊடகங்களின் அடையாளங்கள்.
இஸ்லாமியர்களுக்கெதிராக உலகில், இந்திய நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைப்பதுதான் தங்களின் தலையாய கடமை என்று தங்களது எஜமான அமெரிக்காவும் அதன் சார்ந்த ஊடகங்களும் தங்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்றே ஊடகங்கள் செயல்படுகின்றன. உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் பலவற்றுக்கும் ஊடகத்துறையே ஒருவகையில் காரணமாக இருப்பதனை யாரும் மறுக்க இயலாது. சுய சிந்தனை, ஆழமான விசாராணை, நிடுநிலைமை போன்றவற்றில் ஊடகத்துறையினர் உறுதியாக இருந்திருப்பார்களேயானால் இந்திய ஜனநாயகம் செழித்திருக்கும். ஆயிரக்கணக்கான பிரச்சனைகளும், குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தங்களின் மண்ணிற்காக போராடும் காஷ்மீர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்தும், தன் சொந்த மக்களையே கொன்று குவித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை புலிகள் என்று கூறியும் தங்களின் பாசிச சிந்தனையை பரைச்சாற்றுவதனை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக்கொள்வார்களேயானால் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று வலுவோடு இருக்கும். மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளையும், தகவல்களையும் அப்படி வாந்தி எடுக்கும் இவர்களிடம் நியாயம், நீதி தொடர்பாக கேள்வி எழுப்புவதும், எழுப்பாமல் இருப்பதும் சமமே.
நீதித்துறை:
மற்ற மூன்று துறைகளை ஒப்பிடுகையில் நீதித்துறையானது முக்கியமான் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் நீதி என்பது விலையுயர்ந்த ஒன்றாகவும், சாதாரண மற்றும் பாமர மக்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகவுமே மாறிவிட்டது. மற்ற மூன்று துறைகளும் எப்படி தங்களின் கடமையிலிருந்து வழிகெட்டு சென்றுவிட்டதோ அதுபோலவே நீதித்துறையானதும் தமது கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வழித்தவறி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்புடைய விஷயங்களில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகமாகவே காணப்படுகிறது. சில நீதிபதிகள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற நினைக்கும் போது மற்ற சக நீதிபதிகள், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் போவது மிகவும் வேதனையான ஒன்று.
உண்மையிலேயே நீதித்துறை என்ற தூணிற்கு அதிகாரம் இருக்குமேயானால் ஊழல் அரசியல்வாதிகள் கோலோச்சவும் இயலாது, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய இஸ்லாமிய விரோத இயக்கம் அரசின் நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கவும் முடியாது. ஒரு சாதாரண குடிமகனாகவும், நீதியையும் இந்திய நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு இஸ்லாமியனாகவும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தினை தாங்கும் நீதித்தூணை நோக்கி சில கேள்விகளை முன்வைப்போம்.
1) பொடா என்ற கருப்பு சட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதை அனைத்து நீதிபதிகளும் நன்கு அறிவர். ஆனால் அந்த கருப்பு சட்டமே இல்லாமல் போனப்பிறகும் இன்னும் அந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறைகளில் வதைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
2) பொடாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மீதுக்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே பிறகு ஏன் இன்னும் அவர்கள் சிறையில் வதைப்படவேண்டும்?
3) குறிப்பாக கோத்ராவில் இரயிலை எரித்ததில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிருந்தவர்கள்தான் இரயில் எரிப்பிற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் இரயில் எரிப்பினை காரணம்காட்டி அப்பாவி இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனரே அவர்களை விடுவிப்பதில் ஏன் நீதிமன்றங்கள் தலையிடமறுக்கிறது?
4) உலக சரித்திரம் கண்டிராத குஜராத் அரசின் இஸ்லாமிய விரோத இனப்படுகொலைக்கு காரணம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்தான் என கூறப்படும்போது, அந்த இரயில் எரிப்பு சம்பவம் பற்றி ஏன் முழு விசாரனையில் ஈடுபடவில்லை? சி.பி.ஐ. விசாரனைக்கு மத்திய அரசிற்கு ஏன் அறிவுறுத்தவில்லை?
5) இரயிலை எரித்ததில் வெளியில் இருந்த இஸ்லாமியர்களூக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிர்ருந்தவர்களே என்று யு.சி.பானர்ஜியின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுப்பதேன்?
6) ஒன்றும் அறியா அப்பாவி இஸ்லாமிய பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்டு கொன்றது பற்றியும், ஆயிரக்கணக்கில் குழந்தைகள், முதியவர்கள் என கொல்லப்பட்டது குறித்தும் முன்னின்று விசாரனை நடத்த தயங்குவது ஏன்?(கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியகள் என்ற அலட்சியத்தாலா?)
7) இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய நரவேட்டை நரேந்திர மோடியை “நீரோ மன்னன்” என்று வர்ணித்ததோடு நின்றுவிடாமல் நரேந்திர மோடியை, அவரது சகாக்களையும், அவரின் குருநாதர்களையும் சட்டத்தின மூலம் தண்டனை வாங்கிதர தயங்குவது ஏன்? அதற்கு தடையாக இருப்பவர்களை உலகில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அதிகாரம் இல்லையா?
8) குஜராத நரவேட்டையை நாங்கள்தான் நடத்தினோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் கற்பழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் விதவைகளாக்கினோம், ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம், நூற்றுக்கணக்கான இஸ்லாமியகளின் வழிபாட்டுதளங்களை நாங்கள்தான் இடித்துத் தரைமட்டமாக்கினோம், பெண்களை பிறப்புறுப்புகளை நாங்கள்தான் கிழித்தெறிந்தோம், கற்பினி என்றுகூட பாராமல் அவளின் வயிற்றை கிழித்து அதிலிருந்த கருவினை தீயிட்டு கொழுத்தியதும் நாங்கள்தான் என்று தெஹல்கா நிருபரின் முன் வெட்கமின்றி தங்களின் குற்றத்தினை பெருமையுடன் ஒப்புக்கொண்ட நரவேட்டை நரேந்திரமோடியின் சகாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை நமக்கேன் வம்பு என்று உங்கள் கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்களா?
9) குற்றவாளிகளே தங்களது குற்றத்தினை ஒப்புக்கொண்ட பிறகு வேறு என்ன சாட்சி வேண்டூம் உங்களுக்கு?
10) சொராபுதீன் ஷேக் என்ற அப்பாவி இஸ்லாமியன் குஜராத் காவல்(?)துறையினரால் தீவிரவாதி பட்டம் சுமத்தி கொல்லப்பட்ட போது மெளனம் சாதித்தீர்கள். ஆனால் சொராபுதீன் ஷேக் ஒரு தீவிரவாதி அல்ல அவர் இஸ்லாமியன் என்ற காரணத்தினாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று விசாரனை அறிக்கை தெளிவுபடுத்திய போதும் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் காலம் தாழ்த்துவது சொராபுதீன் ஷேக் போன்ற சாதாரன அப்பாவி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்று தோன்றவில்லையா?
11) இஷ்ராத் ஜெகான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் நரேந்திர மோடியின் காவல்(கூலி)படையினால் கொல்லப்பட்டதும் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால்தான் என்று விசாரனை அறிக்கை தெளிவாக கூறிய பின்பும் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவது எதனால்?
12) சொராபுதீன் ஷேக், இஷ்ராத் ஜெகான் போன்ற நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துகளில் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் கொல்லப்பட்டனர் என்று விசாரனை அறிக்கைகள் தெளிவுபடுத்தியபோது அதே பத்திரிக்கைகள் மெளனம் காப்பது பற்றி அவர்களுக்கு நல்ல அறிவுரையும், ஒரு நெறிமுறையும் வழங்கி தங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலுசேர்த்தாலென்ன?
13) ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கி பயிற்சிகள் மேற்கொள்வதை பத்திக்கைகள் படம்பிடித்து காட்டுகின்றனவே (படங்களை வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றன. இதுவே இஸ்லாமியர்கள் செய்திருந்தால் கற்பனைகதைகள் சிறகடித்து பறந்திருக்கும்) இதன் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட தயங்குவது ஏன்? இஸ்லாமியர்களை கொல்வதற்காக ஆயுதப்பயிற்சி எடுப்பதை பார்த்துவிட்டு, அந்த பயிற்சியினை பயன்படுத்தி இஸ்லாமியர்களை கொன்றபிறகு பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடர்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
14) இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார அமைப்புகளே காரணம் என்ற உண்மையை வெளி உலகிற்கு ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுகாட்டிய குஜராத்தின் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரே அதுபற்றி ஏன் ஆழமான விசாரனை நடத்தவில்லை?
15) கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு சங்பரிவாரத்தின் மீதான விசாரனை என்ன ஆனது. உச்ச நீதிமன்றமே முன்னின்று விசாரனை நடத்துவதில் என்ன நடைமுறை சிக்கலும், தயக்கமும் இருக்கிறது.
16) குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனையின் அளவைவிட அதிகமாகவே விசாராணை என்ற பெயரில் அனுபவித்து வரும் அப்பாவி இஸ்லாமியர்களை சிறைகளிலிருந்து விடுவிக்காதது ஏன்?இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கேள்விக்கனைகள் நீதித்துறையை நோக்கி அணிவகுத்து நிற்கின்றன.
இது எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அர்ப்ப காரணத்தினைக்கூறி நீதித்தூனானது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீதித்துறை கட்டளையோ, அறிவுரையோ இடுமேயானால் அதனை தட்டிகேட்பவர்கள் எவருமில்லை. ஏனெனில் இந்தியாவில் தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு குடிமகனான யாருக்கும் உரிமையில்லையே.
நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ஊடகத்துறை ஆகிய மூன்று தூண்களை விட்டுவிட்டு நீதிதூணிற்கு முன்பு இந்த நியாயமான கேள்விகளை வைப்பதற்கு நீதித்துறை என்ற தூணிற்கு மட்டுமே இன்னும் உயிரும், உணர்ச்சியும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தானேயொழிய வேறு காரணங்கள் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தூண்களுக்கும் மக்களின் மனதில் இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் நீதிதூணின் மீது இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறது.
நாம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை சாதாரன மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை ஏதோ ஒன்றாவது செயலில் தராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான சாதாரன மக்களில் ஒருவன்.

Article: Faizur U.A.E
source:thapalpetti

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.