13/10/09

ஈரான் மூத்த விஞ்ஞானி ஷஹ்ரம் அமீரி எங்கே? மர்மம்...!!!

0 கருத்துகள்
ஈரான்: ஈரானிய விஞ்ஞானி ஷஹ்ரம் அமீரி திடீரென காணாமல் போனதற்கு பின்னால் அமெரிக்காவுடைய கை இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
அமீரி ஈரானின் அணு சக்தி திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஈரானின் ISNA செய்தி நிறுவனம் கூறியதாவது, "ஷஹ்ரம் அமீரி கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பும் போது காணாமல் போனதாக கூறியது. இவர் சவூதி விமான நிலையத்தில் சவூதி அரேபியாவின் காவல் துறையினர்களால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்" என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த செய்தி நிறுவனம், "ஷஹ்ரம் அமீரி ஈரானின் அணு சக்தி நிலையத்தின் தொழிலாளர் என்றும் இவர் வெளி நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு எண்ணிக்கொண்டிருந்தார்" என்றும் கூறியது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மொட்டாகி இதனை மறுத்துள்ளார். மேலும் அவர், "அமீரி காணாமல் போனதற்கு அமெரிக்கா தான் காரணம் என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்கள் கிடைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை மறுத்த அமெரிக்கா அவரைப் பற்றி எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று மறுத்துள்ளது. ஈரான் ரகசியமாக கட்டிவந்த யுரேனியம் செறியூட்டப்படும் வசதி ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் தான் இவர் காணாமல் போயுள்ளார். பூமிக்கு அடியில் எழுப்பப்பட்டு வரும் இந்த ஆலையை ஈரான் ரகசியமாகவே வைத்திருந்தது. இதனை மேற்கத்திய அரசுகள் மோப்பம் பிடித்ததும் ஈரான் அதனை ஒப்புக்கொண்டது.
source:Aljazeera

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.