13/10/09

மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேன்!

0 கருத்துகள்
உடல் முழுவதையும் நிர்வாணமாகக் காட்டும் ஸ்கேனர் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்லும் நபரின் மறைவு அங்கங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும். இதன்மூலம் ஆயுதங்கள் மறைத்து எடுத்துச் செல்வது எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்கேனர் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் இவை தவறாகப் பயன்படுத்த மாட்டா என்றும் விமான நிலையத்தை நடத்தும் BAA நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் இந்த ஸ்கேனர் வழியாகச் செல்லும் போது கோட் போன்ற உடைகலைக் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பயணிகள் விரைவாகப் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து செல்ல இயலும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஸ்கேனர்கள் வெளியிடும் கதிரியக்கம் மனித உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது தான் என்றும் மான்செஸ்டர் விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்ல மறுத்தால் அவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த ஸ்கேனர் குறித்துப் பயணிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
source:inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.