18/6/09

வளைகுடா நாடுகளிலும் பன்றிக்காய்ச்சல் பரவத்தொடங்கியது!


உலகம் முழுவதும் பரவி வந்து கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் வளைகுடாநாடுகளிலும் இப்போது பரவத் தொடங்கியுள்ளது. ஓமான் தவிர எல்லா வளைகுடா நாடுகளிலும் தற்போது இக்காய்ச்சல் வைரஸ் கிருமிகள் வந்துள்ளது சோதனைகளில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவிலிருந்து கத்தர் வந்த இரு பயணியரும், அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக துபை செல்லவிருந்த இன்னொரு பயணியும் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் தென்படவே, அவர்கள் பிற பயணியரிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டு அவர்கள் உடலில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது மூவருக்கும் பன்றிக்காய்ச்சல் கிருமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


தோஹாவிலிருக்கும் கராஃபா மருத்துவ மையத்தில் இம்மூவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தவழும் கைக்குழந்தை என்பது குறிப்பிடத் தக்கது.