9/7/09

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உதவியா?‍சவூதி அரேபியா மறுப்பு

0 கருத்துகள்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தங்களுடைய விமானப்படைத்தளத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி முற்றிலும் தவறானது என்று சவூதி அரேபியா வெளியுறவுத்துறை அதிகாரி உஸாமா நுகாலி கூறினார்.இஸ்ரேலுடன் எங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை.இந்தச்செய்தி ஒரு விதத்திலும் சரியில்லாதது என்றார் அவர்.
விமானப்படைத்தளத்தை பயன்படுத்துவது சம்ப்ந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாதும் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இரு நாடுகளின் பொது விருப்பத்தின் அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது."இஸ்ரேலுடன் ராஜ தந்திர உறவு,பொருளாதார உறவு உள்ளிட்ட எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் எவ்வாறு இம்மாதிரி ரகசிய ஆலோசனை நடத்த முடியும்?"என்று நுகாலி வினவினார்.அரபு நாடுகளின் ஒற்றுமையை தகர்ப்பதற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பும் செய்தி இது என்று அவர் மேலும் கூறினார்.ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இச்செய்தியை மறுத்திருந்தார்.

source:thejas malayalam daily

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.