4/8/09

மைசூர் கலவரம்: 110 பேருக்கு ஜாமீன்

0 கருத்துகள்

பெங்களூரு:மூன்றுபேரின் மரணத்திற்கு காரணமான மைசூர் கலவரத்தில் போலீசாரால் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டவர்களை விடுதலைச்செய்யக்கோரி சமுதாய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய "சிறை நிரப்பும்" போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டதோடு 162 பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைதுச்செய்தது கர்நாடகா காவல்துறை.

கைதுச்செய்யப்பட்டவர்களை மைசூர் தாசில்தார் முன்னால் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். எளிதில் ஜாமீன் கிடைக்கவேண்டிய வழக்கில் தாசில்தார் சட்டவிரோதமாக நடந்துக்கொண்டார். தாசில்தாரின் இந்நடவடிக்கையை கேள்விகேட்டும் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டவர்களை விடுதலைச்செய்யவும் ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணரும்) மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர் நூர் ஜஹானும் இன்னும் 5 நபர்களும். இவர்களுக்காக வழக்கை தாக்கல் செய்தவர் வழக்கறிஞர் சுப்பையா. இதனைத்தொடர்ந்து நீதிபதிகளான கோபால் கவுடா, பக்தவச்சலம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் ஜூலை 31 ஆம்தேதி தாசில்தாரும், நரசிம்மராஜ நகர் துணை ஆய்வாளரும் ஆஜராகவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து ஆஜரான தாசில்தார் கீதா கிருஷ்ணா ஒரே சமுதாயத்தைச்சார்ந்த 162 பேரை ரிமாண்ட் செய்தது போலீஸ் அறிக்கையின்படிதான் என்று கூறியதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 116 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மீதியுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்படும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த மைசூர் நகர தாசில்தார் கீதா கிருஷ்ணாவை உயர்நீதிமன்றம் எச்சரித்துவிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.