1/8/09

குவாண்டனாமோ சிறையிலிருக்கும் வயது குறைந்த கைதியை விடுதலைச்செய்யப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

0 கருத்துகள்

வாஷிங்டன்:கைதுச்செய்யும்பொழுது 12 வயதே நிரம்பிய ஆப்கானிஸ்தானைச்சார்ந்த‌ முஹம்மது ஜவ்வாதை குவாண்டனாமோ சிறைக்கூடத்திலிருந்து விடுதலைச்செய்யப்போவதாக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.
ஜவாதை சிறையில் அடைத்திருப்பது நீதியில்லை என்று ஏற்க‌ன‌வே அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.ஆனால் விசாரணை நடந்துக்கொண்டிருப்பதால் தற்போது விடுதலைச்செய்ய இயலாது என்று அரசு வழ‌க்கறிஞர் வாதிட்டிருந்தார். ஜவாதை விடுதலைச்செய்வது பிறக்கைதிகளின் விடுதலைக்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜவாதிற்கெதிரான விசாரணை முடிய இன்னும் 3 வாரங்களிலிருப்பதால் விடுதலை தாமதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2002 டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் வைத்துதான் ஜவாதை கைதுச்செய்தனர் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் பயணம் செய்த ஜீப்பிற்கு நேராக கிரானைடை எறிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு பதிவுச்செய்யப்படவில்லை. கடுமையான சித்திர‌வ‌தைக‌ளுக்குட்ப‌டுத்தி குற்றம் சம்மதிக்கவைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஜவாதின் குற்ற சம்மதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராணுவ நீதிமன்றநீதிபதி தீர்ப்புக்கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.