1/8/09

முஸ்லிம் என்பதால் வீட்டுமனை மனை வழங்க மறுத்ததாக பாலிவுட் நடிகர் புகார்:வீட்டு வசதி கழகத்திற்கு நோட்டீஸ்

0 கருத்துகள்
மும்பை:முஸ்லிம் என்பதால் வீட்டு மனை வழங்க மறுத்ததாக கூறும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷிமியின் புகாருக்கு விளக்கம் கேட்டு மாநில சிறுபான்மை கமிஷன் மும்பை வீட்டு வசதி கழகத்திற்கு நோட்டீஷ் அனுப்பியுள்ளது.
மும்பை பாலி ஹில் பகுதியில் வீட்டுமனை வாங்க தடையில்லா சான்றிதழ் கேட்டு பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷிமி வீட்டுவசதி கழகத்தில் மனு செய்திருந்தார். ஆனால் சான்றிதழ் வழங்க இயலாது என் வீட்டு வசதி கழகம் மறுத்துள்ளது. வீட்டுவசதி கழகத்தின் இந்த செயலுக்கு காரணம் தான் முஸ்லிம் என்பதால்தான் என்று ஹிந்தி படத்தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஹாஷிமி தெரிவித்தார்.
இடத்தின் உரிமையாளர் தனக்கு மனை வழங்க சம்மதித்ததை சுட்டிக்காட்டியபிறகும் வீட்டு வசதி கழகம் மறுப்பு தெரிவித்தது மத துவேசம் என்று ஷாஷிமி தெரிவித்தார். மகேஷ் பட் கூறுகையில், "மத அடிப்படையில் வேற்றுமை பாராட்டுவது இந்த நாட்டைபீடித்துள்ள கொள்ளை நோய். இது மிகவும் கவலைக்கிடமானது. சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளானபின்னும் மதரீதியான வைரஸ் பாலி ஹில் போன்ற பகுதிகளில் இன்னும் உள்ளது." என்றார்.
ஹாஷிமி சிறுபான்மை கமிஷனிடம் இது பற்றி புகார் அளித்ததைத்தொடர்ந்து கமிஷன் வீட்டு வசதி கழகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இது பற்றி வீட்டு வசதி கழகம், "நடிகர் என்பதால் முன்னுரிமை அளிக்க இயலாது. மேலும் கழகத்தின் தலைவர் ஊரில் இல்லை" , என்று கூறியுள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒரு சிலரைத்தவிர அனைவரும் ஹிந்துக்கள் என்றும் ஒரு முஸ்லிம் கூட இதில் உறுப்பினராக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நடிகருக்கே இந்த கதியென்றால் சாதாரண முஸ்லிமின் நிலை?.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.