4/8/09

சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு:எஸ்.ஐ.டிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
புதுடெல்லி:2005 ஆம் ஆண்டு குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொஹ்ரபுதீன் ஷேக் வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் குஜராத் அரசு தயாராக்கிய குற்றப்பத்திரிகையில் மோசடி நடந்துள்ளது என்பதை கண்டறிந்ததைத் தொடர்ந்து விசாரணையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை எஸ்.ஐ.டிக்கு மாற்றுவது தொடர்பாக குஜராத் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நீதிபதிகளாகிய தருண் சாட்டர்ஜி, அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு மாற்றினர். சொஹ்ரபுதீன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் குஜராத் மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நஷ்டஈடு எவ்வளவு என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. நஷ்டஈடு எவ்வளவு வழங்கவேண்டும் என்பதை மாநில அரசு முடிவெடுக்க அனுமதிக்கவேண்டும் என்று வழக்குரைஞர் கேட்டதைத்தொடர்ந்து சிறப்பு பெஞ்ச் அதனை அங்கீகரித்தது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொஹ்ரபுதீன் ஷேக்கையும் இன்னும் இரண்டும் நபர்களையும் குஜராத் காவல்துறை அநியாயமாக சுட்டுக்கொன்றனர். சாட்சிகளை அழிப்பதற்காக சொஹ்ரபுதீன் ஷேக்கின் மனைவி கவுசர் பீவியையும் வழக்கின் முக்கிய சாட்சி துளசிராம் பிரஜாபதியையும் காவல்துறையினர் கொலைச்செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.