4/8/09

ஃபலஸ்தீன் முஸ்லிம்களை வெளியேற்றிய சம்பவம்:இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு

0 கருத்துகள்
கிழக்கு ஜெருசலத்திலிருந்து ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றிய நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எல்லாவித சர்வதேச சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது இஸ்ரேல் என்று ஐக்கியநாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இஸ்ரேலின்
இந்நடவடிக்கை பதட்டத்தை அதிகரிக்கவும், சமாதான நடவடிக்கைகளை இல்லாமலாக்கவுமே உதவும் என மத்தியகிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஐ.நா வின் சிறப்புத்தூதர் ரோபர்ட் செரி கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த அக்கிரம நடவடிக்கையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது. ரோட் மேப் ஒப்பந்தத்தை மீறும் சட்டமீறல் நடவடிக்கை இது என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது. அமெரிக்காவின் கண்டனத்தை இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க செய்தித்தொடர்பாளர் மெக்கான் மேட்ஸன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும், இஸ்ரேல் கூறிக்கொண்டிருக்கும் சமாதானம் என்பதற்கு முற்றிலும் பொருந்தாத நடவடிக்கை இது என்றும் ஜெருசலமிலுள்ள பிரிட்டன் தூதரகம் கூறியுள்ளது.

யூத தீவிரவாதிகளின் விருப்பங்களை இஸ்ரேல் நிறைவேற்றக்கூடாது என்று பிரிட்டனும் கூறியுள்ளது. ஃபலஸ்தீனிகளை சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றி யூதர்களை குடியமர்த்தியதால் 19 பிஞ்சுக்குழந்தைகள் உட்பட்ட இரண்டுகுடும்பங்கள் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது என ஃபலஸ்தீன் பிரச்சனைக்கான மத்தியஸ்தர் ஸவூப் இரகாத் கூறுயுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடருமென்றால் அமைதி ஏற்படுவதற்கு நீண்டகாலமாகும்.
ஷேக் அல் ஜரா பிரதேசத்திலிலுள்ள இரண்டு வீடுகள் யூதர்களுக்கு சொந்தமென்று இஸ்ரேல் நீதிமன்றத்தின் அநீதமான தீர்ப்பைத்தொடர்ந்துதான் நாஸிர் காவி மற்றும் மெஹ்ஜாத் ஹானு ஆகியோரின் குடும்பங்களை இஸ்ரேல் போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.உடனடியாகவே யூதக்குடும்பங்களை குடியமர்த்தவும் செய்தனர்.
நாஸிர் காவியின் குடும்பத்தில் 38 உறுப்பினர்கள். 50 வருடங்களாக இக்குடும்பம் இங்குதான் வசித்துவருகிறது. கதவுகளை உடைத்து கொள்ளையர்களைப்போல் உள்ளே நுழைந்த இஸ்ரேல் போலீஸ் குடும்ப அங்கத்தினரை பலவந்தமாக பிடித்து இழுத்து வெளியேற்றியதோடு பொருள்களையெல்லாம் வெளியே தூக்கி வீசியதாக நாஸிர் காவி கூறுகிறார். தற்ப்பொழுது தங்களுக்கு பூமிதான் கட்டில் என்றும் வானம் போர்வை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மெஹ்ஜாத் ஹானுவின் குடும்பத்தில் 16 பேர் உள்ளனர். தங்களை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு பின்னர் எங்களையும் எங்கள் பொருள்களையும் ஒரு ட்ரக்கில் ஏற்றி வேறொரு இடத்தில் கொண்டுவிட்டனர். தற்ப்பொழுது நாங்கள் சாலைஅருகில் தங்கிருப்பதாக கூறுகிறார் மெஹ்ஜாத் ஹானு. ஜெருசலமிலிருந்த்து ஒட்டுமொத்த ஃபலஸ்தீனியர்களையும் வெளியேற்றுவதுதான் இஸ்ரேலின் திட்டம் என்றும் அவர்தெரிவித்தார். 1967 ஆம் ஆண்டுதான் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்களிடமிருந்து அபகரித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.