4/8/09

தம்மாமில் 'விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் IFF நடத்திய கருத்தரங்கம்

0 கருத்துகள்

தம்மாம் இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் சார்பாக தம்மாம் நகரில் 31-07-09 அன்று விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சகோதரர் உமர் ஸமான் அவர்களின் குர்ஆன் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சகோதரர் ரியாஸ் அஹமது அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தி இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் குறித்த விரிவான முன்னுரையை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் கேரளா பகுதியைச் சார்ந்த சகோரர் சுனீர் அவர்களும் இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் உருது பகுதியைச் சார்ந்த சகோதரர் ஆஸிப் மற்றும் கர்நாடகா பகுதியைச் சார்ந்த சகோதரர் ஆஸிப் ஆகியோர் முறையே மலையாளம், உருது மற்றும் கன்னட மொழிகளில் சில நிமிடங்கள் உரை நிகழ்த்தினர்.

பின்னர் சிறப்பு பேச்சாளர் சகோதரர் திப்பு சுல்தான் அவர்கள் விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் விரிவான உரையை நிகழ்த்தினார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட கலவரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன்கள் குறித்தும், சச்சார், மிஸ்ரா மற்றும் லிபரஹான் கமிஷன்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். கமிஷன்களை அமைப்பதில் ஆர்வம் காட்டும் அரசுகள் அந்த கமிஷன்களின் முடிவுகளை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு பல வருடங்களுக்கு பின்னர் நிவாரணத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் அவலத்தையும் மக்களுக்கு கூறினார். குற்றம் செய்த ஃபாஸிஸவாதிகள் சுதந்திரமாக வெளியே திரியும் அதே சமயம் முஸ்லிம்கள் சிறைகளில் அல்லல்படுவதையும் நினைவூட்டினார்.

இத்தகைய விசாரணை கமிஷன்களால் முஸ்லிம்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதை தெளிவாக விளக்கினார். முஸ்லிம்கள் தங்களை தாங்களே சக்தி படுத்தாதவரையில் இந்த நிலைகள் மாறாது என்பதை முத்தாய்ப்பாக கூறி தனது உரையை நிறைவுபடுத்தினார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தாயகத்தில் செய்து வரும் பணிகள் குறித்த ஒரு விரிவான பார்வையை சகோதரர் ஃபைஸல் அவர்கள் வழங்கினார். அழைப்பு பணியில் ஆரம்பித்து இன்றைய அரசியல் பணி வரை அனைத்து பணிகளையும் விளக்கினார்.

ஏறத்தாழ நூற்று நாற்பதுகோதரர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சமுதாயத்தை முன்னேற்றும் இந்த பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக சகோதரர் யாஸர் அரஃபாத்தின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.