2/9/09

நெல்லை அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு

0 கருத்துகள்
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பள்ளிவாசலில் இரவில் தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவி அடுத்துள்ள உலகன்குளம் அருகே பள்ளிவாசல் உள்ளது. அங்கு நேற்றிரவு 11 மணிக்கு முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வெளியில் வந்தனர்.அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த சிலர் கல்வீசி தாக்கினர். இதில் இரு பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல் முன்பியிருந்த டியூப் லைட்டுகள் கல்வீச்சில் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் .
சம்பவ இடத்திற்கு நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், சேரன்மகாதேவி டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சங்கர், களக்காடு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பதட்டம் நிலவியதைத் தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.