25/10/09

புதுப் பொலிவுடன் பாலைவனத் தூது

2 கருத்துகள்
அன்பார்ந்த வாசகர்களே! இப்போது உங்கள் பாலைவனத் தூது www.paalaivanathoothu.tk அல்லது http://paalaivanathoothu.blogspot.com என்ற முகவரியில் காணலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள், மற்றும் உங்கள் படைப்புகளை paalaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பாலைவனத் தூதின் பழைய முகவரிக்கும் புதிய முகவரிக்கும் உள்ள வேறுபாடு
பழைய முகவரி www.palaivanathoothu.tk , மின்னஞ்சல் palaivanathoothu@gmail.com புதிய முகவரி www.paalaivanathoothu.tk , மின்னஞ்சல் paalaivanathoothu@gmail.com
வாசகர்கள் இந்த புதிய முகவரிக்கும் வருகை தந்து தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

23/10/09

நான் கிரிக்கெட் வீரன், பயங்கரவாதி அல்ல- பர்வேஸ் ரசூல்

1 கருத்துகள்
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன், பயங்கரவாதியல்ல" என்று கூறியுள்ளார்.
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது.
கடந்த 17 அக்டோபர் 2009 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.
இதில் ஒருவரான பர்வேஸ் ரசூல்,ஜம்மு காஷ்மீர் அணிக்காக 3ஆம் நிலையில் களமிறங்கி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்து, தன் மீது சுமத்தப்பட்ட சந்தேகக்கணைக்குப் பெங்களூர் ஸ்டேடியத்திலேயே பதிலளித்தார். அவர் 50 ரன்களை எடுத்தபோது பர்வேஸ் ரசூலை பாராட்ட பெவிலியனில் அணி முழுதும் திரண்டு எழுந்து நின்று கரகோஷம் செய்தது. பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது, "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க விரும்பினேன்; பயங்கரவாதியல்ல, நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம்" என்றார்."அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை, என்ன நடந்தது என்பது பற்றி நான் ஆச்சரியமடைந்தேன். இதனால் இங்கு கிரிக்கெட் விளையாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர்கள் என்னை கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு கூறினர்" என்று தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேளையில் தன் நிலைமையினைக் குறித்து கூறினார்.
இதே போன்ற எண்ணம் ஜம்மு காஷ்மீர் அணிப் பயிற்சியாளர் அப்துல் கயூமிற்கும் ஏற்பட்டது. "நானும் கிரிக்கெட் அணியை முதலில் இங்கிருந்து அழைத்துச் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த விஷயத்தை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் இங்கு தங்க முடிவு செய்தோம்.நாங்கள் காஷ்மீரி என்பதாலும், நாங்கள் சந்தித்து வரும் கடின காலங்களாலும், எங்கு சென்றாலும் எங்களை சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக மும்பை சென்று அங்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கிறோம்; அங்கும் இதனால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுவோம" என்று வருத்ததுடன் கூறியுள்ளார்
கயூம் பெங்களூர் காவல்துறையின் இந்த கைதை கண்டித்து போட்டியின் போது காஷ்மீர் வீரர்களை எதிர்ப்பின் அடையாளமாக கறுப்புத் துணியைக் கையில் கட்டிக் கொண்டு ஆடுமாறு பயிற்சியாளர் கயூம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."
மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை" என விமர்சகர்கள் கர்நாடகா அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
source:inneram

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!

0 கருத்துகள்
"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில் அதற்கு பங்குண்டா?" என்பது உட்பட விரிவாக விசாரணை நடத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள டிஜிபி, தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு கேரளத்தில் செயல்படுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை"எனவும் "அவ்வாறான ஒரு இயக்கம் கேரளத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இஸ்லாமிய மதத்திற்கு மற்ற மதத்திலிருந்து பெண்களை மதம் மாற்றும் செயல் நடைபெறுகிறதா? என்பதைக் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source:inneram

மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாசலில் காங். மீண்டும் வெற்றி- பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி

0 கருத்துகள்
புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.அங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
இம் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மகாராஷ்டிரத்தில் 288 மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மொத்தம் 144 இடங்களி்ல் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணியான சிவ சேனா 90 இடங்களி்ல் மட்டுமே வென்றுள்ளன. குறிப்பாக சிவசேனாவுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி 13 இடங்களிலும் பிற கட்சிகளும், சுயேச்சைகளும் 39 இடங்களிலும் வென்றுள்ளன. இதன்மூலம் ராஜ் தாக்கரே கட்சி முதன்முதலாக சட்டசபையில் அடியெடுத்து வைக்கிறது.ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
மும்பை, தானே, புனே உள்ளிட்ட இடங்களில் சிவசேனா-பாஜகவின் தோல்விக்கு ராஜ் தக்கரேவின் கட்சி தான் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் தோல்விக்கு நவ நிர்மாண் வேதிகே தான் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிவசேனாவின் வாக்குளை ராஜ் தாக்கரே சிதறியடித்து சின்னாபின்னாவாக்கிவிட்டார். மேலும் தேவைப்பட்டால் காங்கிரஸ்-பவார் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரவும் தயாராக இருப்பதாக தேர்தலுக்கு முன்பே ராஜ் தாக்கரே கூறியது குறிப்பிடத்தக்கது.பால் தாக்கரேவின மகனும் சிவசேனா செயல் தலைவருமான உத்தவ் தாக்கரவைவிட ராஜ் தாக்கரேவுக்குத் தான் இளைஞர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளதாகவும், ராஜுடன் கைகோர்ப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் சரத் பவாரும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஹரியாணா
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மொத்தமுள்ள 90 இடங்களில் அக்கட்சி 40 தொகுதிகளில் வென்று்ள்ளது.ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தள் கட்சி 32 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் மற்றவர்கள் 14 தொகுதியிலும் வென்றுள்ளனர்.
ஹரியாணாவில் காங்கிரஸைச் சேர்ந்த புபிந்தர் சிங் ஹோடா முதல்வராக உள்ளார். அவரே அடுத்த முதல்வராகவும் தொடர்வார் என்று தெரிகிறது.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரசேத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளி்ல் காங்கிரஸ் கட்சி 48 இடங்களிலும், மற்ற மாநில கட்சிகள் 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்க உள்ளது. இப்போது அருணாசல் பிரதேசத்தில் தூர்ஜி கண்டும் முதல்வராக உள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற பின்னர் சந்தித்துள்ள முதல் சட்டசபைத் தேர்தல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்துள்ள முதல் பெரிய தேர்தல் என்பதால் மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போல இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்பட்டன. இந்த வெற்றிகளின் மூலம் மத்தியில் காங்கிரசின் செல்வாக்கு மேலும் உயர்ந்துள்ளது.உட்கட்சிப் பூசல்களால் தத்தளித்து வரும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் பெரும் பின்னடைவைத் தரும் என்று தெரிகிறது.

21/10/09

ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கி 6பேர் பலி

1 கருத்துகள்
ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6பேர் பலியாயினர்.
இன்று(அக்:21) மதியம் 2மணியளவில் ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்திலிருந்து சூடான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு சிறிதுதூரம் உயரே சென்றதும் கீழே விழுந்து நொறுங்கியது.இதில் பயணித்த விமானிகள் உட்பட 6பேர் பலியாயினர். விபத்திற்காண காரணம் தெரியவில்லை.
source:Gulfnews

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

1 கருத்துகள்
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார்.52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்.
source:thatstamil

பாட்னா மத்ரஸாவில் பயங்கர குண்டு வெடிப்பு இந்துத் தீவிரவாதிகளின் சதியா?

2 கருத்துகள்
பாட்னா ஹரியனாவில் அமைந்துள்ள மத்ரஸா இஸாத்துல் உலூம் ஹிந்த். இங்கு 65 மாணவர்கள்,6 ஆசிரியர்கள் என 10 அறைகள் உள்ளன.

நேற்று 20-10-2009,இரவு 9 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்த்தது.
இதில் மத்ரஸவின் பின் பகுதி,ஹாஸ்டல் ரூம் , மத்ரஸாவின் அலுவலகம் உட்பட பல பகுதிகள் இடிந்தன. இந்த சம்பவம் இஷா (இரவுத் தொழுகை) தொழுகைக்கு சற்று பின் நடந்த்ததால் உயிர் சேதம்,படுகாயம் ஏதுவும் இல்லை.
மத்ரஸா ஆசிரியர் மவுலானா நவ்சாத் அஹ்மத் அளித்த பேட்டியில் மத்ரஸாவை சுற்றி 2 கி.மீ. வரை நில நடுக்கம் போல் அதிர்ந்த்ததாகவும்,அந்த இடம் சுற்றி புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தெறிவித்தார். இதனை இந்துத் தீவிரவாதிகள் செய்த சதியாக இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
source:twocircles

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை

0 கருத்துகள்
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.

சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிந்த CBI அது தொடர்பாக பலரை கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தூர் நகருக்கு வந்து இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டுவெடிப்பில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் இயக்கங்களே காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
CBI ன் இந்த விசாரணையின் மூலம் சங்பரிவார் அமைப்பினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
source:webdunia

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

0 கருத்துகள்
கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.
source:inneram

உலகின் இளம் தலைமையாசிரியர்!

0 கருத்துகள்
கோல்கத்தா, அக். 18: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத்தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).
குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார். ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.

அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு
நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.
டீச்சர் -பாபர்அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!
பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.
சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

source:நண்பர்கள் அனுப்பிய இமெயில்

19/10/09

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட அறிமுக விழா

2 கருத்துகள்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அறிமுக விழா டெல்லியிலும்,பல்வேறு மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 18ம் தேதி நடைபெற்றது.

அதன்படி சென்னையில் சரியாக மாலை 4மணியளவில் மாபெரும் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் வரை சென்றது.
பேரணிக்கு மாவட்டத் தலைவர் திரு.p.முகம்மது ஹூசைன் தலைமையேற்று துவக்கிவைத்தார். மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு.ஏ.அஹமது பாஷா முன்னிலை வகித்தார். SDPI பிரதிநிதி திரு.இ.முஹம்மது ரஷீது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மாலை 4மணிக்கு மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி.S.அமீர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு.M.ஹஸன் அப்துல் வாரிப் அவர்களும், SDPI பிரதிநிதிகள் திரு.M.முகம்மது அன்ஸாரி, திரு.S.M.சவுந்தராஜன், திரு.S.அப்துல் அஜீஸ், திரு.K.வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.M.முகம்மது புஹாரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் திரு.V.பாலு அவர்கள், சமூகசேவகர் K.M.ஷாஹூல் ஹமீது அவர்கள், சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபர் டாக்டர்.திரு.R.K.முஹைதீன் ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.J.முஹம்மது நாஜிம் அவர்களும், மாவட்ட தலைவர் திரு.முஹம்மது ஹூசைன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.A.அமீர் சுல்தான் அவர்கள் நன்றியுரையாற்றினார். பேரணியிலும்,பொதுகூட்டத்திலும் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டம் சுமார் 10மணியளவில் முடிவுற்றது.

நரோடா பாட்டியா கலவரத்தில் தொடர்புடையவனுக்கு ஜாமீன் மறுப்பு

1 கருத்துகள்
"95 பேரை பலி கொண்ட நரோடா பாடியா வழக்கு இந்த நவீன உலகில் தனித்துவமானது என்றும் இந்த சம்பவம் சட்டத்தின் அடித்தளத்தையே பலவீனமடைய செய்திருக்கின்றது" என்றும் குஜராத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அபிலாஷா குமாரி கூறியுள்ளார்.

இவர் இதனை, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயின் ஜாமீன் மனுவை ரத்து செய்து விட்டு இதனை கூறினார். இந்த சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு கடந்த நவம்பர் மாதம் கைது செய்தது.

"இந்த வழக்கு மற்ற எந்த ஒரு சாதாரண வழக்கு போன்றதல்ல. இந்த வழக்கின் பின்னணி பொதுமக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது. உண்மையில் இந்த வழக்கு பல மக்களை வேண்டுமென்றே கொன்று குவித்ததில் தொடர்புடையது. இன்றைய நவீன காலத்தில் இது போன்று வேறு எந்த நிகழ்வுகளும் நடந்ததில்லை. இது போன்ற சம்பவங்கள் மக்கள் மீதும் தேசத்தின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று அந்த நீதி மன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஜி, ஹுசைன் நகர் மக்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடையவன். இந்த சம்பவத்தில் 95 உயிரிழந்தனர்.
source:Times of india,thapalpetti

18/10/09

கோவாவில் குண்டுவெடிப்பு ஹிந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு

0 கருத்துகள்
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மர்கோவா என்ற நகரில் நேற்று இரவு இரு சக்கரவாகனத்தில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். படுகாயங்களுடன் ஒருவர் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலியான பாடீல் என்ற நபர் மாலேகான் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிராக்யா சிங்கின் அபினவ்பாரத் என்ற ஹிந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் இது பற்றி கூறுகையில்,குண்டுவெடிப்பிற்கு சனாதன் ஷவுன்ஸ்தா என்ற அமைப்புக்கு தொடர்பிருப்பதாகவும் போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நடந்த இடம் கிரேஸ் என்ற கிறிஸ்தவதேவாலயத்திற்கு அருகில் எனவே ஏதேனும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என்பதால் போலீசார் இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
source:twocircles

17/10/09

சந்தூக் பயணம்- இந்தப் பயண விவரம்,சிரிப்பதற்கு;அல்ல சிந்திப்பதற்கே!!

0 கருத்துகள்
இந்த பயண விவரத்தை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். source: சமரசம்