31/5/09

சென்னை தாசாமக்கானில் "பள்ளி செல்வோம் " பிரச்சாரம் - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தியது

0 கருத்துகள்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மே மாதத்தில் "பள்ளி செல்வோம்" பிரசாரத்தை பல மாநிலங்களில் நடத்தி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் கல்வி விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்டின் கேரளா ,தமிழ்நாடு ,கோவா,ஆந்திரா ,ராஜஸ்தான் ,மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரின் மாநில கமிட்டிகள் செயல்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் இலவசப் பாடப்புத்தகம் ,இலவச சீருடை மற்றும் ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை ஏற்று,தொடர்ந்து அவர்கள் படிக்க வழிவகை செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை தாசம்கான் பகுதியில் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்துடன் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் 30.05.2009 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சுமார் 100 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைப்பெற்ற குழந்தைகள் கலந்து கொண்ட பிரச்சார ஊர்வலத்தை சகோதரர். முகம்மது ஆசம் அவர்கள் துவக்கி வைத்தார் . பின்னர் பிரச்சாரம் பகல் 12 மணிக்கு இனிதே நிறைவுற்றது .

இராணுவ வீரனால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி

0 கருத்துகள்
ஈராக், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் அமெரிக்க பயங்கரவாதிகளால் தொடர்ந்தும் கற்பழிக்கப்படுகிறார்கள். இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவை சட்டத்தின் முன் செல்லாக்காசு.
ஆதாரங்களை அழித்து சட்டப்படி குற்றம் புரியும் தீவிரவாதிகளை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்?எந்த நீதிமன்றத்தில் போய் நீதி கேட்க முடியும்?தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்று அலறும் தாய் பொய் சொல்கிறாள். தவறு செய்த தீவரவாதி உண்மை சொல்கிறான்.
கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருந்தும் கேட்டுத்தான் என்ன பலன்.சட்டப்படி நடத்தப்படுகிற ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் கொலைகள் இன்னும் எத்தனையோ கொடூரங்கள் கணக்கில் வருவதில்லை. அவை கணக்கெடுக்கப்படுவதில்லை.
கடந்த வியாழக்கிழமை (28) 14 வயது சிறுமியை கற்பழித்து அவளையும் மூன்று குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்ததற்காய் பகிரங்க மன்னிப்பு கோரினான் அமெரிக்க இராணுவ வீரன் ஸ்டீவ் க்ரீன். Former U.S. soldier Steven Green got life in prison after being convicted of murdering four Iraqis.
''நான் ஒரு குடும்பத்தை அழிப்பதற்குகாரணமாகிவிட்டேன். மீண்டும் அவர்களை திரும்ப பெற முடியுமென்றால் அது என்னால் முடியாது.'' என்று பயங்கரவாதி ஸ்டீவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினான்.(ஸ்டீவ் க்ரீன் கோரிய மன்னிப்பு அறிக்கை) பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தமை, அவள் பெற்றோர் மற்றும் 6 வயதான சகோதரியை கொலை செய்த குற்றத்திற்காக அமெரிக்காவின் கென்டக்கி மாவட்ட நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டான் ஸ்டீவ்.
பயங்கரவாதம் எங்கே விதைக்கப்படுகிறது? அதை விதைப்பவர்கள் யார்?தன் மகள் கற்பழிக்கப்படுவதை கண்களால்; பார்க்கிற கொடுமையை ஒரு தந்தையாக ஒரு தாயாக இருந்து யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியுமா?அத்தனை கொடுமைகளும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கின்றன.ஸ்டீவ்வைப்போன்ற எத்தனையோ தீவிரவாதிகள் இன்னும் கடமையில் இருக்கிறார்கள்.
கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டீவ்வுடன் அவனுடைய சகாக்கள் 5 பேர் அமெரிக்க இராணுவத்தால் பல குற்றச்செய்ல்கள் புரிந்த காரணத்தால் பதவீ நீக்கம் செய்யப்பட்னர். பின்பு அவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 மாதம் முதல் 110 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
உன் போன்ற தீவிரவாதிகளை செருப்பால் அடித்து கொலை செய்ய வேண்டுமென்று என் மனசாட்சி உத்தரவிடுகிறது


நன்றி: ஹிஷாம் முஹம்மத்

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார்.

0 கருத்துகள்


பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார். 75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு இறந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ள கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வாசகர்கள் உண்டு.


1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாலப்பாட்டு குடும்பத்தில் பிறந்த கமலாசுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா. தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். பால்யகால ஸ்மரணகள், நிர்மாதளம் பூத்தகாலம், பக்ஷியுடைய மரணம், யா அல்லாஹ், என்ற கதா என்பவை இவருடைய பிரசித்திப்பெற்ற நாவல்கள். கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.


அவருக்கு 65 வயதானபோது 1999 இல் அவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். மாதவிக்குட்டி என்ற தனது பெயரையும் கமலா சுரய்யா என்று மாற்றிக் கொண்டார்.
தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்த பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!
சகோதரி கமலா சுரய்யா அவர்கள்உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன. தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

அவரின் இறுதி மரியாதைகளைக் கேரளத்தில் வைத்து நிறைவேற்றுவதற்காக அவரது உடல் கொச்சி கொண்டு வரப்படும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தால் - (ஈரான்-இந்தியா) எரிவாயு திட்டம் இறுதி முடிவு எடுக்கமுடியவில்லை

0 கருத்துகள்

ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தில் சேருவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று பெட்ரோலிய துறை உயர் அதிகாரி தெரிவித்தார். ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த இரண்டு வருடங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதலில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அடுத்தாக பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டுவருவதற்கு, இந்தியா பாகிஸ்தானுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பற்றி பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை. இந்நிலையில் நேற்று ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை உயர் அதிகாரி கூறுகையில், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறவில்லை. இதில் சேருவதற்கு முன் சில விளக்கங்கள் பெறேவண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல், இந்தியா கடந்த இரண்டு வருடங்களாக புறக்கணித்து வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால், இந்தியா ஈரானுடனான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை புறக்கணிக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. அத்துடன் அமெரிக்க நிறுவனம் அஜர்பெய்ஜானில் இருந்து இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவும் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை இந்தியா புறக்கணிப்பதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 25 ல் ஈரான் தலைநகர் டெக்ரானில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஈரான் அதிபர் முகமது அகாமித், பாகிஸ்தான் அதிபர் அஸிப் அலி ஜர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஈரான்-பாகிஸ்தானுக்கும் இடையே, இயற்கை எரிவாயு கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி ஈரானில் இருந்து ஆரம்பகட்டமாக தினசரி 30 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரித்து தினசரி 60 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படும். இதற்காக பெர்ஷியன் வளைகுடாவில் தெற்கு பார்ஸ் எண்ணெய் துரப்பண பகுதியில் இருந்து, 2,100 கி.மீ குழாய் அமைக்கப்படும். இந்தியா பின்னர் விரும்பினால், இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலையில் ஈரான் உள்ளது.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதாக போப் வருத்தம்

0 கருத்துகள்

மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக போப் பெனிடிக்ட் கவலை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகரில் தான் இயேசுநாதர் பிறந்தார்.இதையொட்டி, இப்பகுதிகளில் ஒரு காலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். லெபனான் நாட்டின் உயர் பதவிகளில் கிறிஸ்தவர்கள் தான் உள்ளனர். எகிப்து நாட்டில் உள்ள செல்வந்தர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். ஈராக் நாட்டு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் அதிகம் பேர் கிறிஸ்தவர்கள். இங்குள்ள டாக்டர்கள், இன்ஜினியர்கள் என கிறிஸ்தவர்கள் தான் அதிகம் இருந்தனர். கடந்த நூற்றாண்டில் 20 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, நாஜி படைகளின் தாக்குதலாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் தீவிரமாக வளர்ந்து வருவதாலும் , தற்போது 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என சமீபத்தில் ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பயணம் செய்த போப் பெனிடிக்ட் வருத்தம் தெரிவித்திருந்தார். ஜெருசலத்தில் நடந்த கூட்டத்தில் போப் பெனிடிக்ட் பேசுகையில், "கர்த்தரின் காலடி பட்ட இந்த இடத்தில் தான் கிறிஸ்தவம் பிறந்தது. ஆனால், இந்த மண்ணில் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இங்குள்ள தேவாலயங்கள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. இயேசு நடந்துச் சென்ற இந்த பூமி அனைவருக்கும் பொதுவானது" என்றார்.

30/5/09

மத்திய அமைச்சரவை - துறைகள் மற்றும் அமைச்சர்கள்

0 கருத்துகள்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் முழுப் பட்டியல்.
கேபினட் அமைச்சர்கள்
1. மன்மோகன் சிங் பிரதமர்
2. பிரணாப் முகர்ஜி நிதி
3. ப.சிதம்பரம் உள்துறை
4. எஸ்.எம். கிருஷ்ணா வெளியுறவு
5. மம்தா பானர்ஜி இரயில்வே
6. ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு
7. சரத்பவார் விவசாயம்
8. வீரபத்ரசிங் எஃகுத் துறை
9. விலாஸ்ராவ் தேஷ்முக் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை.
10. குலாம் நபி ஆசாத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
11. சுஷில் குமார் ஷிண்டே மின்சாரம்
12. வீரப்ப மொய்லி சட்டம் மற்றும் நீதித்துறை
13. பரூக் அப்துல்லா மறுபயன்பாட்டு எரிசக்தி
14. ஜெய்பால் ரெட்டி நகர்புற வளர்ச்சி
15. கமல்நாத் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
16. வயலார் ரவி வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன்
17. மீரா குமார் நீர்வளம்
18. தயாநிதிமாறன் ஜவுளி
19. ஆ. ராசா தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்
20. முரளி தியோரா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
21. அம்பிகா சோனி தகவல் ஒலிபரப்பு.
22. மல்லிகார்ஜூன கார்கே தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு
23. கபில்சிபல் மனிதவள மேம்பாடு
24. பி.கே. ஹண்டிக் சுரங்கம் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாடு
25. ஆனந்த் சர்மா வர்த்தகம், தொழில்துறை
26. சி.பி. ஜோஷி கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்
27. குமாரி செல்ஜா வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா
28. சுபோத்காந்த் சகாய் உணவு பதப்படுத்துதல்
29. எம்.எஸ்.கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
30. ஜி.கே.வாசன் கப்பல் போக்குவரத்து
31. பவன் கே. பன்சல் பாராளுமன்ற விவகாரம்
32. முகுல் வாஸ்னிக் சமூக நீதி மற்றும் அமலாக்கம்
33. மு.க. அழகிரி இரசாயனம், உரம்
34. காந்திலால் பூரியா பழங்குடியினர் நலன்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
1. பிரபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து
2. பிரிதிவிராஜ் சவுகான் விஞ்ஞானம், தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், இராணுவ வீரர் நலன், மக்கள் குறை கேட்பு, ஓய்வூதியம், பாராளுமன்ற விவகாரம்
3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் நிலக்கரி, புள்ளியியல், திட்ட அமலாக்கம்
4. சல்மான் குர்ஷித் கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்
5. தின்ஷா ஜே. படேல் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை
6. கிருஷ்ணா தீரத் பெண்கள் குழந்தைகள் மேம்பாடு
7. ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல், வனம்
இணை அமைச்சர்கள்
1. ஸ்ரீகாந்த் ஜெனா இரசாயனம், உரம்.
2. ஈ.அகமது ரெயில்வே
3. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் உள்துறை.
4. வி.நாராயணசாமி திட்டம், பாராளுமன்ற விவகாரம்.
5. ஜோதிர் ஆதித்ய சிந்தியா வர்த்தகம், தொழில்துறை.
6. டி. புரந்தேஸ்வரி மனிதவள மேம்பாடு.
7. கே.எச்.முனியப்பா இரயில்வே.
8. அஜய் மக்கான் உள்துறை
9. பனபாக லட்சுமி ஜவுளி
10. நமோ நாராயண் மீனா நிதித்துறை
11. எம்.எம்.பல்லம்ராஜூ பாதுகாப்பு
12. சவுகதா ராய் நகர்புற வளர்ச்சி
13. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிதி
14. ஜிதின் பிரசாதா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
15. ஏ.சாய் பிரதாப் எஃகு
16. பிரனீத் கவுர் வெளியுறவு
17. குர்தாஸ் காமத் தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்.
18. ஹரீஷ் ராவத் தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு.
19. கே.வி. தாமஸ் விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது வினியோகம்.
20. பாரத்சிங் சோலங்கி எரிசக்தி
21. மகாதேவ் எஸ்.கந்தேலால் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
22. தினேஷ் திரிவேதி சுகாதாரம், குடும்ப நலன்.
23. சிசிர் அதிகாரி கிராமப்புற மேம்பாடு.
24. சுல்தான் அகமது சுற்றுலா
25. முகுல் ராய் கப்பல் போக்குவரத்து
26. மோகன் ஜதுவா தகவல் ஒலிபரப்பு
27. டி.நெப்போலியன் சமூகநீதி, அமலாக்கம்
28. எஸ்.ஜெகத்ரட்சகன் தகவல் ஒலிபரப்பு.
29. காந்தி செல்வன் சுகாதாரம், குடும்ப நலன்.
30. துஷார் பாய் செளத்ரி பழங்குடியினர் நலன்.
31. சச்சின் பைலட் தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்.
32. அருண்யாதவ் இளைஞர் நலன், விளையாட்டு.
33. பிரதீக் பிரகாஷ்பாபு பாடீல் கனரக தொழில் துறை, பொதுத்துறை.
34. ஆர்.பி.என்.சிங் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
35. சசிதரூர் வெளியுறவு
36. வின்சென்ட் பலா நீர்வளம்
37. பிரதீப் ஜெயின் கிராமப்புற மேம்பாடு
38. அகதா சங்மா கிராமப்புற மேம்பாடு

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி "பள்ளி செல்வோம் " என்ற முழக்கத்துடன் நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது.

0 கருத்துகள்
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தேசிய அளவில் "பள்ளிச் செல்வோம்" என்ற பிரசாரத்தை இந்தியா முழுவதும் Popular Front of India என்ற அமைப்பு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் தொடங்கியது . இதில் பள்ளி மாணவ மாணவிகள் , சமுக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பிரச்சார இயக்கம் மக்கள் மத்தியிலும் , மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .
சரியான தருணத்தில் நடைபெறும் பிரச்சாரம் என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

EIFF - "பள்ளிச் செல்வோம்" கல்வி வழிகாட்டி துண்டு பிரசுரம்

0 கருத்துகள்
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தேசிய அளவில் "பள்ளிச் செல்வோம்" என்ற பிரசாரத்தை இந்தியா முழுவதும் Popular Front of India என்ற அமைப்பு செய்து வருகிறது. அதனை பின்பற்றி அமீரகத்தில் Emirates India Fraternity Forum என்ற சமூக அமைப்பு வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டி துண்டு பிரசுரம் இங்கு தரப்பட்டுள்ளது . இதை உங்கள் நண்பர்கள் / குடும்பத்தார்களுக்கு மத்தியில் பரப்பவும். பயன் பெறவும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் புதிய அரசுக்கு பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்
.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல் தொடர்கிறது.

0 கருத்துகள்
நேற்று சிட்னியில் ஹாரிஸ் பார்க் அருகிலுள்ள வீட்டிலிருந்த ராஜேஷ் குமார் என்ற மாணவரை ஒரு கும்பல் பெட்ரோல் பாம்ப் எறிந்து தாக்கியது.இதில் 30 சதவீதம் உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் கத்திகுத்து காயமடைந்த பல்ஜிந்தர் சிங் மருத்துவமனையிலிருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டார்.ஆனால் கத்திகுத்து காயம்பட்டு அவசர சிகிட்சை பிரிவில் இருக்கும் ஸ்ராவண்குமார் நிலையில் மாற்றமில்லை.இது சம்பந்தமாக 5 நபர்களை போலீஸ் கைதுச்செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்திய மாணவர்களுக்கெதிரான இந்த தாக்குதல்கள் இனவெறி என்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடன் கைதுச்செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள இந்தியன் ஹைகமிஷனர் சுஜாதா சிங் விக்டோரியா பிரதமர் ஜோண் பிரம்பியை சந்தித்துவிட்டு இதனை வலியுறுத்தினார்.இத்தைய தாக்குதல்களை தடுக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்

ஹமாஸ் தலைவர்களில் ஒருவரை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றது.

0 கருத்துகள்
ஃபலஸ்தீனிலுள்ள மேற்குகரையில் வசித்துவந்த ஹமாஸின் போராளிகளுக்கு பயிற்ச்சி வழங்கும் ஆபித் மஜீத் தாவூதை வீட்டில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவ வீரன் சுட்டுக்கொன்றான்.1995இல் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்கள் சிறையில் கழித்தவர்தான் தாவூத்.இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கெதிராக ஆயுதமெடுத்து போராட ஃபலஸ்தீன அதிகாரிகள் தயாராகவேண்டுமென்று ஹமாஸின் ஃபவ்சி ஃப்ர்ஹூம் கூறியுள்ளார்.

ஈரான் குண்டுவெடிப்பு பின்னணியில் அமெரிக்கா

0 கருத்துகள்
நேற்று ஈரானிலுள்ள சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சஹதான் பகுதியில் உள்ள ஷியா மஸ்ஜிதில் குண்டு வெடித்து 19 பேர் மரணமடைந்த கொடுஞ்செயலுக்கு பின்னால் அமெரிக்கா என்று ஈரானின் ஸிஸ்தான் மகாண துணை கவர்னர் ஜலால் ஸய்யாஹ் கூறியுள்ளார்.குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைதுச்செய்யப்பட்ட 3 நபர்களிலிருந்து இது சம்பந்தமான அதிக விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

28/5/09

மோடிக்கு எதிரான விசாரனை - சிறப்பு புலனாய்வுக்குழு விசாரனை தொடங்கியது

0 கருத்துகள்

குஜராத் மாநிலம், கோத்ராவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு குஜராத் முதல்வர், நரேந்திர மோடி மற்றும் போலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பதனை அறிய டெல்லி உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரனையை தொடங்கியுள்ளது. இதனை புலனாய்வுக்குழுவின் தலைவர் ராகவன் தெரிவித்தார்.
மோடி உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி யின் மனைவியான ஜகியா ஜெப்ரி மனு மீதான விசாரனையில், மோடி மற்றும் குஜராத் அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், திரு, ராகவன் தலைமையில் சிறப்பு புலானாய்வுக்குழுவை அமைத்துள்ளது.
இக்குழு, மூன்று மாத காலத்திற்குள் தங்களின் விசாரனையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் ஆயுத ஊழல், ஏர் இந்தியா மேனேஜர் கைது!

0 கருத்துகள்
இஸ்ரேலுடனான 1200 கோடி ரூபாய் ஆயுதபேரத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏர் இந்தியா முன்னாள் துணை பொது மேலாளர் ரமேஷ் நம்பியாரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீஸுடனான ஆயுத ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கமிசன் பெற, கொல்கத்தாவிலுள்ள ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போர்டு முன்னாள் டைரக்டர் ஜெனரல் சுதீப்தா கோஷிற்கு ரமேஷ் நம்பியார் உதவியதாக கடந்த தினம் சி.பி.ஐ தெரிவித்திருந்தது. இந்த ஊழல் தொடர்பாக கோஷ் மற்றும் அவரது உதவியாளர் கனாய்லால் தாஸையும் கடந்த 19 ஆம் தேதி சி.பி.ஐ கைது செய்திருந்தது. ரமேஷ் நம்பியாரின் கைப்பெட்டியிலிருந்து 1.29 இலட்சம் ரூபாயும் 19 ஆம் தேதி அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 22.92 இலட்சம் ரூபாய் மற்றும் பல வெளிநாட்டு வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை சி.பி.ஐ கைப்பற்றியது. கொல்கத்தா மற்றும் டெல்லியில் சமீபகாலங்களில் சி.பி.ஐ நடத்தியப் பல்வேறு ரெய்டுகளில், சுதீப்தா கோஷிற்கும் தனியார் ஆயுத வியாபாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள் சி.பி.ஐக்குக் கிடைத்துள்ளது.கொல்கத்தாவிலிருந்து அஷீஷ் போஸ், டெல்லியிலிருந்து பிரதீப் ராணா ஆகிய இருவரையும் இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களுக்கும் ஆயுத வியாபாரி சுதீர் சௌதரியுடன் தொடர்புண்டு என்ற விவரம் முன்னரே வெளியாகியிருந்தது.

கேரளா: துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
செய்தியைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.
நன்றி: தினகரன்

23/5/09

ஆப்கானிஸ்தானில் திணறும் அமெரிக்கா?

0 கருத்துகள்

கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த 9/11 உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் அசம்பாவிதத்திற்கு உசாமா பின் லேடன் தான் காரணம் எனக் கூறி, "பின்லேடனை உயிருடனோ /பிணமாகவோ பிடிப்பதை இலட்சியமாகக்" கொண்டு, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபான்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக போர் நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா, தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி கர்ஸாயி தலைமையில் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்தி, தொடர்ந்து பன்னாட்டுப் படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தும், இந்த நிமிடம் வரை உசாமா பின்லேடனின் ஒரு துரும்பைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு நேர்மாற்றமாக 2001-ல் இருந்ததை விட அல்காயிதா இன்று உலகளாவிய அளவில் தனது கரங்களை ஆழமாக ஊன்றி வருவதாகவே உலகெங்கிலுமிருந்தும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தவறான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் உலகில் தீவிரவாதம் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர் என்ற அவப்பெயரோடு ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகை விட்டு தன் சொந்த மாளிகைக்குத் திரும்பிய பின், வெள்ளை மாளிகைக்குப் புதிதாக குடிவந்த கறுப்பின அதிபர் ஒபாமா, உலகில் தீவிரவாத செயல்களின் அதிகரிப்பிற்கு தாலிபான்கள் தான் காரணம் என்றும் அவர்களை அழிப்பதே தன் இலட்சியம் என்றும் புஷ்ஷின் அதே கறுப்புக் கொள்கையினை இன்று தொடர்கின்றார். ஆனால், இதுவரை தாலிபான்களையும் ஒழித்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாகிஸ்தானின் ஒரு பகுதியில் இஸ்லாமிய ஷரீயா சட்டத்தைக் கொண்டு வரும் அளவிற்கு அவர்களின் ஆதிக்கம் வளரவே செய்துள்ளது. தாலிபான்களை ஒட்டுமொத்தமாக அழிக்காதவரை, அமெரிக்காவுக்குச் சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை ஒருபோதும் உருவாக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி உளவு மற்றும் ஆய்வு நிறுவனம் கடந்த இரு மாதங்களுக்கு முன் எச்சரித்திருந்தது. ஆச்சரியமாக, 9/11 தாக்குதலுக்குக் காரணம் எனவும் ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுக்க அவரே காரணம் எனவும் கூறப்பட்ட உசாமா குறித்தோ அல்காயிதா குறித்தோ இப்போது பேச்சே இல்லை! அண்மையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையினை ஒட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 130 பொதுமக்கள் பலியானதாக பெண்டகன் ஒப்புக்கொண்ட மறுநாள் அமெரிக்கக் கூட்டுப்படையினரால் ஆப்கனிஸ்தானில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்த அதிபர் ஹமீத் கர்சாயி வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்தது.அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு அமெரிக்கப்படையினரால் ஆப்கானில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதலாகும் இது. ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், "இதுபோன்ற இழப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க அமெரிக்கப் படையினர் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள்; அதே சமயம் தாலிபான்களுக்கு எதிரானப் போரில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது" என்றார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் எதிர்நோக்கும் கடினமான சூழலைக் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. குறைந்தளவு ஆயுதங்களுடன் தாலிபான்களை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கப் படையினரின் அல்லல்களைக் கருத்தில் கொண்டு, ஆப்கனில் அரசியல் ரீதியிலான தீர்வைக் எதிர்நோக்கியுள்ளதாக வாஷிங்டன் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் போராளிகளால் ஏற்படும் பாரிய இழப்புகளை மட்டுப்படுத்த நேசநாட்டுப் படைகளையும் பயன்படுத்தும் திட்டமிருப்பதற்கான அறிகுறியையும் காண முடிகிறது.போராளிகளைப் பேச்சுவார்த்தைக்கு உடன்படுத்தும் வகையில் அமெரிக்கக் கூட்டுப்படை தனது ராணுவ பலத்தை உபயோகித்து அதற்கான சூழலை உருவாக்க 100,000 எண்ணிக்கையிலான அமெரிக்கக் கூட்டுப்படைகளை தயாராக வைத்துள்ளது. அவர்களை வைத்துப் போரிடும் முன்னதாக வான்வழித் தாக்குதல்களை அதிகப்படுத்தி தாலிபான்களின் நம்பிக்கையையும் இருப்புகளையும் தகர்க்க வேண்டும்.பொதுமக்களுடன் இரண்டறக் கலந்துள்ள போராளிகளை அடையாளம் காண்பது மிகவும் சிரமம். தாலிபான்கள் போர்களம் போல் ஓரிடத்தில் ஒன்று கூடாமல் பஸ்தூன் போராளிகளைப் போல் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபடுவதால் நிறைய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வான் வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது. இதுபோன்ற எதிர் நடவடிக்கை உத்திகளில் பாரியளவில் பொதுமக்கள் பலியாவார்கள். பொதுமக்கள் பலியானாலும் போராளிகள் முற்றிலும் துடைத்தெறியப்படுவதற்கான முயற்சிகளை நிறுத்த முடியாது. எனினும் முதலில் மக்களின் அபிமானத்தைப் பெறுவது அவசியம்.இதிலிருந்து தாலிபான்களுடன் சமாதானப்பேச்சு நடத்தும் பேச்சுக்கே வாய்ப்பில்லையென அமெரிக்கா திட்டவட்டமாக கோடிட்டுக் காட்டி உள்ளது.அமெரிக்கத் தலைமை இராணுவத் தளபதி டேவிட் பெட்ராஸின் கூற்றுப்படி அமெரிக்கப் படையினருக்குப் போராளிகளையும் பொதுமக்களையும் பகுத்தறியும் செயல்திறன் குறைவாக உள்ளதால், புஷ் நிர்வாகம் இராக்கில் செய்தது போன்று ஒபாமாவும் அதற்கான நடவடிக்கைகளை ஆப்கனில் எடுப்பார் என்றார்.இராக்கைக் காலனியாக்கும் கனவுடன் தவறான உளவு மற்றும் இராணுவத் தகவல்களின் அடிப்படையில் அவசரப்பட்டு போர் தொடுத்து, பதவி முடியும்போது அதிபர் புஷ் காலணியுடன் விடைபெற்றார். அதேபோல் ஒபாமாவும் ஆப்கனிஸ்தான் விசயத்தில் இவர்களின் பேச்சை நம்பிக்கொண்டு மென்மேலும் படைகளை அனுப்பிக் கொண்டிருப்பதால் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் வேலையிழந்த அமெரிக்கர்களும் CHANGE வசனம் பேசிய ஒபாமாவை நோக்கித் தங்களுடைய காலணிகளை CHANGE பண்ணாமலிருந்தால் சரி!

கேரள காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயல்!

1 கருத்துகள்

கடந்த 16ம் தேதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலுள்ள கடற்கரை கிராமமான சின்னதுறை மற்றும் பீமா பள்ளி பகுதிகளில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற காவல்துறை, ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள, மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காவல்துறையின் நிதானமற்ற இச்செயலில் காவல்துறை உயரதிகாரிகளின் சதி இருப்பதாக முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பல்வேறு சமுதாய அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. காவல்துறையின் சதியே இவ்விஷயத்தில் உள்ளதால் உடனடியாக, 6 பேர் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கையும் விடுத்து வருகின்றன.
துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவ இடத்தில் 4 பேரும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ கல்லூரியில் வைத்து மறுநாள் இருவரும் மரணமடைந்திருந்தனர். இதில் ஃப்ரோஸ் என்ற 15 வயது சிறுவனும் உண்டு. துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் காவல்துறை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது இந்தச் சிறுவனைச் சுட்டு வீழ்த்திய காவல்துறையினர், உயிருக்குப் போராடும் நிலையில் உரிய மருத்துவ சிகிட்சைக்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் அனுமதிப்பதை விடுத்து, அச்சிறுவனை மிருகங்களை விடக் கேவலமாக உயிருக்குப் போராடும் நிலையிலேயே கடற்கரை சுடுமணலில் இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் சம்பவக்காட்சிகளை மொபைலில் படம் பிடித்த பொதுமக்களில் சிலர், இப்படக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பி உள்ளனர். சுடப்பட்ட சிறுவனின் இரு கைகளையும் இரு காவல்துறையினர் பிடித்துக் கொண்டு தர தரவென மணலில் இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் செல்லும் காட்சி, கொடூரமாக உள்ளது.
ஆரம்பத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டக் கலவரத்தில் தான் ஒரு பிரிவைச் சேர்ந்த 6 பேர் இறந்தனர் எனக் கூறி வந்தக் காவல்துறை, அனைவரின் உடலிலிருந்தும் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளால் அவர்கள் கொல்லப்பட்டது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் தான் என்பது தெளிவிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது.
சம்பத்தில் தொடர்புடைய காவல்துறையினரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவுகளைக் கேரள அரசு வெளியிடும் என செய்திகள் கூறுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள இப்படக்காட்சிகள் கேரள அரசுக்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது

21/5/09

குஜராத்: முஸ்லிம் கைதிகளின் துயரம் - உண்மையறியும் குழுவின் களஆய்வு

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.

நன்றி: விடியல் வெள்ளி

அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாசிஸ்டுகள்

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.

நன்றி: விடியல் வெள்ளி

கர்நாடகா பிரபல வழக்கறிஞர் படுகொலை பின்னணியில் காவல்துறையும் பாசிசமும்

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.

நன்றி: விடியல் வெள்ளி

தாடிவைப்பது தாலிபானிஸமா?

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.
நன்றி: விடியல் வெள்ளி

கருணையும் காதலும் ஒன்றாய் இணைந்தால் ........

0 கருத்துகள்
இதனைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.

நன்றி: விடியல் வெள்ளி

19/5/09

அய்யர் வரும்வரை அமாவாசை ...????? - காமெடி கார்ட்டூன்

0 கருத்துகள்

சேதுத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும்: கருணாநிதி உறுதி

0 கருத்துகள்

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும்" என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"சேது சமுத்திரத் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிப்பதிலும், சட்டரீதியாக அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுகள் அக்கறை கொண்டுள்ளது. எனவே, அந்தத் திட்டம் வருங்காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. அதை ரத்து செய்து விட்டதாக யார் சொன்னாலும், அதை நிறைவேற்ற விட மாட்டோம் என யார் தடுத்தாலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்பதை முழு நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் கருணாநிதி.

ரியாத் வாழ் தமிழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி.

0 கருத்துகள்
இதனை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

'2009' லோக்சபா தேர்தலில் சமுதாய கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்.

0 கருத்துகள்
இதனை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும் .

18/5/09

கேரளாவில் போலீஸ் பயங்கரவாதம். 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை.37 பேர் மருத்துவமனையில்.3 பேர் நிலை கவலைக்கிடம்.

1 கருத்துகள்

முன்னறிவிப்பில்லாமல் கேரளா போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பீமாப்பள்ளியைச்சார்ந்த அஹ்மத் ஸலீம்(50), பாதுஷா(35),செய்தலவி(24) மற்றும் அப்துல் ஹக்கீம்(27) ஆகியோர் சம்பவ இடத்தில் குண்டு பாய்ந்து மெளத்தானார்கள்.துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த 37 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவசரசிகிட்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் தலையில் காயமடைந்த ஷபீக்(21), ஷஜீர்(22) மற்றும் அலி(34) ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சிறியத்துறை என்ற பகுதியைச்சார்ந்த ஷிபு என்ற ரவுடி சனிக்கிழமை மாலையில் அடாவடியாக பீமாப்பள்ளியில் பணம் வசூலித்ததுதான் பிரச்சனைக்கு காரணம்.ஒருக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காதாதால் அவ்வூரைச்சார்ந்தவர்கள் கஞ்சா வியாபாரியான ஷிபுவை அடித்ததால் பீமாப்பள்ளியை சார்ந்தவர்களின் மீன்பிடி படகுகளையும் வலைகளையும் தீயிட்டுக்கொளுத்தியதைத்தொடர்ந்து பீமாப்பள்ளியைச்சார்ந்த இளைஞர்கள் சிலர் சிறியத்துறைச்சென்று அங்குள்ளவர்கள் மீது கல்லெறி நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.கடற்கரையிலிருந்த மீன்பிடி தொழிலாளிகள் பலர் இதில் காயமடைந்தனர்.மரணித்தவர்களின் நெஞ்சிலும் கழுத்திலும்தான் குண்டு பாய்ந்திருந்தது.எந்தவொரு முன்னறிவிப்போ கலவரம் ஏற்ப்பட்டால் பேணவேண்டிய முன் நடவடிக்கைகளோ செய்யாமல் திடீரென துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டதாக சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.சம்பம் நடந்த பகுதியில் போலீஸ் எந்தவொரு தடைவுத்தரவோ அல்லது கட்டுபாடுகளோ விதித்திருக்கவில்லை.துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர்தான் காவல்துறை தடைவுத்தரவு பிறப்பித்திருக்கிறது.ரவுடி ஷிபுவின் கும்பல் நடத்தும் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரை பீமாப்பள்ளி ஜமாஅத் தலைவர் என்.வி.அஸீசும் வார்டு கவுன்சிலர் பீமாப்பள்ளி ரஷீதும் வேண்டியுள்ளனர் ஆனால் கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பின்னர் அந்த பகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவரும் தெரிவித்தனர். 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் காயமடைந்தவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.இரண்டு நபர்களின் முதுகுபகுதியில் குண்டு பாய்ந்துள்ளது இது அவர்கள் திரும்பி ஒடும்பொழுது சுட்டதை காண்பிக்கிறது.வெடியேற்று விழுந்தவர்களை காவல்துறையினர் துப்பாக்கியின் தலைப்பகுதியைக்கொண்டு தாக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.குண்டடிப்பட்டவர்களை போலீஸ் ஊர்வாசிகளிடகுருந்து முதலில் மறைத்து வைத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.போலீஸின் இந்த பயங்கரவாதத்தால் மீன் பிடித்தொழில் முடித்து வந்த அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட ஷிபுவையோ அல்லது அவனைச்சார்ந்த ரவுடிக்கும்பலையோ காவல்துறை இதுவரை கைதுச்செய்யவில்லை.மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கமுயன்ற ஜமாஅத் நிறுவாகிகளை போலீஸ் காவல்நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.காவல்துறையின் இந்த பயங்கரவாத நடவடிக்கியால் முஸ்லிம்-கிறிஸ்தவ கலவரம் மூழும் சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.அப்பாவிகளை படுக்கொலைச்செய்த காவல்துறைக்கெதிராக உடனடியாக கொலைக்குற்ற வழக்கு பதிவுச்செய்யவேண்டுமென்று திருவனந்தபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடது சாரி ஆளும் கட்சி வேட்பாளர் பி. ராமச்சந்திரன் நாயர் கோரிக்கைவிடுத்துள்ளார். செய்தி:தேஜஸ் 18 மே.09

17/5/09

2009 லோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடிய முஸ்லீம் வேட்பாளர்கள்

0 கருத்துகள்
Successful Muslim Candiates

1.Andhra Pradesh
Hyderabad
Asaduddin Owaisi
All India Majlis-E-Ittehadul Muslimeen


2.Assam
Dhubri
Badruddin Ajmal
Assam United Democratic Front


3.Assam
Barpeta
Ismail Hussain
Indian National Congress


4.Bihar
Kishanganj
Mohammad Asrarul Haque
Indian National Congress


5.Bihar
Begusarai
Dr. Monazir Hassan
Janata Dal (United)


6.Bihar
Bhagalpur
Syed Shahnawaz Hussain
Bharatiya Janata Party

7.Jammu & Kashmir
Baramulla
Sharief Ud Din Shariq
Jammu & Kashmir National Conference

8.Jammu & Kashmir
Srinagar
Farooq Abdullah
Jammu & Kashmir National Conference


9.Jammu & Kashmir
Anantnag
Mirza Mehboob Beg
Jammu & Kashmir National Conference


10.Jammu & Kashmir
Ladakh
Hassan Khan
Independent


11.Kerala
Malappuram
E. Ahamed
Muslim League Kerala State Committee

12.Kerala
Ponnani
E.T. Muhammed Basheer
Muslim League Kerala State Committee


13.Kerala
Wayanad
M.I. Shanavas
INC

14.Tamil Nadu
Vellore
Abdulrahman
Dravida Munnetra Kazhagam


15.Tamil Nadu
Theni
Aaron Rashid.J.M
Indian National Congress

16.Uttar Pradesh
Kairana
Tabassum Begum
Bahujan Samaj Party


17.Uttar Pradesh
Muzaffarnagar
Kadir Rana
Bahujan Samaj Party

18.Uttar Pradesh
Moradabad
Mohammed Azharuddin
Indian National Congress


19.Uttar Pradesh
Sambhal
Dr. Shafiqur Rahman Barq
Bahujan Samaj Party

20.Uttar Pradesh
Kheri
Zafar Ali Naqvi
Indian National Congress

21.Uttar Pradesh
Farrukhabad
Salman Khursheed
Indian National Congress

22.West Bengal
Maldaha Uttar
Mausam Noor
Indian National Congress


23.West Bengal
Maldaha Dakshin
Abu Hasem Khan Choudhury
Indian National Congress

24.West Bengal
Murshidabad
Abdul Mannan Hossain
Indian National Congress

25.West Bengal
Basirhat
Sk. Nurul Islam
All India Trinamool Congress

26.West Bengal
Uluberia
Sultan Ahmed
All India Trinamool Congress

27.West Bengal
Burdwan - Durgapur
Sk. Saidul Haque
Communist Party of India (Marxist)

28.Lakshadweep 1
Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B
Indian National Congress

பாலைவனத் தூது - மே 2009

0 கருத்துகள்
தூதினைப் பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும் .






தூதைப் பற்றிய கருத்துக்களும் , ஆலோசைனைகளும் வரவேற்கப்படுகின்றன .
அனுப்பவேண்டிய முகவரி palaivanathoothu@gmail.com

துபாயில் வெகு சிறப்பாக நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

0 கருத்துகள்

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்திய சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) கடந்த 15.05.09 வெள்ளியன்று துபாயில் லேண்ட்மார்க் ஹோட்டலில் NRIகளுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றிய கருத்தரங்கை வாகாய் நடத்தியது.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு சரியாக இரவு 8 மணிக்கு துவங்கியது. EIFF தமிழ்நாடு கிளை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்தோடு EIFF அமைப்பை அறிமுகப்படுத்தி அதன் பல்வேறுபட்ட சமூக நலப் பணிகளை விவரித்துக் கூறினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் அவரே.
ஏன் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்பது குறித்து பல புள்ளிவிவரங்களை அழகுற எடுத்துக் கூறி அடுத்து உரையாற்றினார் EIFF இன் பேச்சாளர் செய்யத் அலீ. NRI கள் இங்கே பல அல்லல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அவர் தம் துயர் துடைக்கப்படவேண்டுமெனில் அவர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும். அப்பொழுதே Bargaining Power என்கிற நமது உரிமைகளைக் கோரும் அதிகாரம் நமக்குக் கிடைக்கும் என்று தனது உரையில் கூறிய அவர் இது குறித்து தெளிவாகப் புரியும்படி இன்னும் பல கருத்துகளைக் கூறினார்.
அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மு.மு.க.வின் துணைத்தலைவர் ஹுசைன் பாஷா உரை நிகழ்த்தினார். வளைகுடாவில் மட்டும் சுமார் 45 லட்சம் NRI கள் வாழ்கிறார்கள். இவர்களால் குறைந்தது 4 எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
EIFF இன் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் உமர் பாரூக் (கேரளா) அடுத்து உரை நிகழ்த்தினார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 இல் பிரிவு 19, 20 களில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்பொழுதே NRI களுக்கு ஓட்டுரிமை சாத்தியப்படும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்னொரு சிறப்பு விருந்தினரான ஈமான் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் அடுத்ததாக உரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் வேலூரில் போட்டியிடும் ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவது குறித்து குரல் கொடுப்பார் என்று முதுவை ஹிதாயத் தனது உரையில் குறிப்பிட்டார். (அப்துர் ரஹ்மான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். இன்ஷா அல்லாஹ் அவர் பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.)
அடுத்ததாக மற்றொரு சிறப்பு விருந்தினரான ''கலீபாக்களின் ஆட்சி'' (இலக்கியச்சோலை வெளியீடு) என்ற நூலின் ஆசிரியரும், கட்டடக்கலை நிபுணருமான ஹபீப் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். EIFF நண்பர்களை தனக்கு நீண்ட நாட்களாக தெரியும் என்றும், அவர்கள் எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள் என்றும் தன் உரையில் குறிப்பிட்ட அவர், NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவதால் எவ்வளவு பலன்கள் உள்ளன என்று விவரித்து கூறினார்.
யு.எ.இ. தமிழ் சங்கத் தலைவர் ரமேஷ் விஸ்வநாத் அவர்களை நாம் விழாவுக்கு அழைத்திருந்தோம். வரும் வழியில் அவரது வாகனம் சிறு விபத்துக்குள்ளானதால் - (யாருக்கும் ஆபத்து இல்லை) காவல் நிலையம் சென்று அங்கேயே தாமதமாகி விட்டதால் - அவரால் விழாவுக்கு வர முடியவில்லை. இருந்தும் அங்கிருந்து விழாக் குழுவினருக்கு message அனுப்பி தான் பேச எண்ணியிருந்த கருத்துகளை விழாவில் பதிவு செய்தார்.
அடுத்ததாக சங்கமம் டிவியின் நிர்வாக இயக்குனர் கலையன்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார். EIFF இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த நேர்த்தியையும், EIFF செயல்வீரர்களின் கட்டுப்பாட்டையும் வெகுவாகப் பாராட்டி தனது உரையில் குறிப்பிட்ட அவர், EIFF நிச்சயமாக NRI களுக்கு ஒட்டுரிமையைப் பெற்றுத் தரும் என்று கூறினார். அத்தோடு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார் அவர். அவருக்கு பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நினைவுப் பரிசை வழங்கினார்.அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமுடன் பலர் மேடைக்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இறுதியாக பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். EIFF இந்தப் பிரசாரப் பணியை மூன்று கட்டங்களாக நடத்தவிருக்கிறது. முதல் கட்டமாக பிரசாரக் கூட்டங்களை வளைகுடா நாடுகளில் நடத்தி வருகிறது. இரண்டாம் கட்டமாக புதிய அரசு அமைந்தவுடன் அதன் கவனத்தை ஈர்க்கும் விதமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாநாடுகளை நடத்தவிருக்கிறது. அரசு செவி சாய்க்கவில்லை எனில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனில் மூன்றாம் கட்டமாக சட்ட ரீதியான முயற்சிகளில் EIFF இறங்கும். உச்ச, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழுவை உருவாக்கி அதன் மூலமாக இறுதி வரை EIFF போராடும் என்று அவர் EIFF இன் போராட்ட வழிமுறைகளை விளக்கமாக குறிப்பிட்டார்.
சகோதரர் Fajludheen அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கலந்துகொண்டோர் நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளை கொடுக்கப்பட்ட Feedback Form இல் பதிவு செய்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

14/5/09

விடியல் இந்த மாதம்

1 கருத்துகள்


தாடிவைப்பது தாலிபானிஸமா?


கர்நாடகா பிரபல வழக்கறிஞர் படுகொலை பின்னணியில் காவல்துறையும் பாசிசமும் !!?


பெண் குழந்தை பிறந்தால் ...??


விதைக்கப்படும் விஷ வித்துக்கள் ?!!!


ஒரிசாவில் தொடரும் கிறிஸ்தவர்களின் மரண ஓலம் !!


அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாசிஸ்டுகள்


தொடரும் பயணங்கள் ........


ஒபாமாவும் அமெரிக்க ஜனநாயகமும் ??


இன்னும் பல தலைப்புகளில் .................




வாங்கிவிட்டீர்களா இப்போது பரபரப்பான விற்ப்பனையில் .......


11/5/09

துபாயில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

0 கருத்துகள்

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.இன்ஷா அல்லாஹ் வருகிற 15.05.2009 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு லேண்ட்மார்க் ஹோட்டலில் (Palm Restaurant, First Floor, Nasser Square, Deira) இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களும் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஓட்டுரிமையை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குப் பெற்றுத் தந்திட நாம் ஒன்றிணைவோம். அணி திரள்வோம்.

அழைப்பவர்கள் : ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை''(Emirates India Fraternity Forum - EIFF)

Date : 15.05.09

Time : 8.00 PM

Venue : Palm Restaurant, First Floor, Landmark Hotel, Nasser Square, Deira, Dubai

10/5/09

அபுதாபியில் அழகுற நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு.

0 கருத்துகள்

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.அதன் அடிப்படையில் கடந்த 09.05.2009 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் (Behind Green House Building) இந்தக் கருத்தரங்கு துவங்கியது.

துவக்கமாக சகோதரர் ரோஸ்லான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்தோடு EIFF இன் பலதரப்பட்ட சமூகப் பணிகள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.அடுத்ததாக கருத்தரங்கின் மையக் கருத்தைக் குறித்து சகோதரர் செய்யது அலீ அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அவர் பல புள்ளிவிவரங்களைக் கூறி அழகுற விளக்கினார். மொத்த வெளிநாடுவாழ் இந்தியர்களான சுமார் 2 கோடி பேர்களில் வளைகுடாவில் மட்டும் சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் வருட ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி வளைகுடாவிலிருந்து மட்டும் சுமார் 2,46,000 கோடி அந்நியச் செலாவணியாக இந்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் GDP இல் 5 சதவீதமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த NRI களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பது விந்தையாக உள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்ததாக EIFF இன் கேரள சகோதரர் ரஹீம் மாஸ்டர் அவர்கள் உரையாற்றினார். இங்குள்ள NRI களின் மக்கள்தொகையை கணக்கில் கொண்டால் இவர்களால் 5 எம்பிக்களையும், 35 MLA களையும் தேர்ந்தெடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு புள்ளிவிவரங்களை குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அய்மான் அமைப்பைச் சார்ந்த சகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களும், INJAZAT நிறுவனத்தின் Capability Manager சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களும் அடுத்தடுத்து உரையாற்றினார்கள். EIFF நடத்தும் இந்த ஓட்டுரிமை போராட்டம் காலத்தின் தேவை என்றும், வெற்றி கிட்டும் வரை EIFF இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும், அதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் என்றும் உண்டு என்றும் அவர்கள் தங்கள் உரையில் குறிப்பிட்டனர்.அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமாக முன் வந்து சகோதரர்கள் கௌஸ் பாஷா, அஜ்மல், சுபைர் போன்றோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக சகோதரர் அப்துல் கனி அவர்கள் முடிவுரை ஆற்றினார். EIFF இந்தப் போராட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்தவுள்ளது. முதல் கட்டமாக அனைத்து வளைகுடா நாடுகளிலும் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.இரண்டாம் கட்டமாக, இந்தியாவில் புதிய அரசு அமைந்தவுடன், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.நமது கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் மூன்றாம் கட்டமாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழு சட்ட ரீதியாக NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும். இவ்வாறு குறிப்பிட்ட அவர், இன்ஷா அல்லாஹ் EIFF இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராடும் என்று குறிப்பிட்டார்.கலந்து கொண்டோரிடம் Feed Back படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன.இறுதியாக சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

9/5/09

மாயையில் உழலும் மக்கள் - விடியல் வெள்ளி

0 கருத்துகள்
இதனை பெரிதாக்கி படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்
நன்றி : விடியல் வெள்ளி

ஹிஜ்ரா ஒன்றா, இரண்டா ? - விடியல் வெள்ளி

0 கருத்துகள்
இதனை பெரிதாக்கி படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்
நன்றி : விடியல் வெள்ளி

நற்குணங்கள் நீடிக்க வேண்டுமானால் ........-விடியல் வெள்ளி

0 கருத்துகள்
நற்குணங்கள் நீடிக்க வேண்டுமானால் ........

இதனை பெரிதாக்கி படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்
நன்றி : விடியல் வெள்ளி

8/5/09

பாலைவனத் தூது - ஏப்ரல் 2009

1 கருத்துகள்
பாலைவனத் தூதைப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும் .



இந்தத் தூது குறித்த தங்கள் மேலான கருத்துக்களை palaivanathoothu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.