25/10/09

புதுப் பொலிவுடன் பாலைவனத் தூது

2 கருத்துகள்
அன்பார்ந்த வாசகர்களே! இப்போது உங்கள் பாலைவனத் தூது www.paalaivanathoothu.tk அல்லது http://paalaivanathoothu.blogspot.com என்ற முகவரியில் காணலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள், மற்றும் உங்கள் படைப்புகளை paalaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பாலைவனத் தூதின் பழைய முகவரிக்கும் புதிய முகவரிக்கும் உள்ள வேறுபாடு
பழைய முகவரி www.palaivanathoothu.tk , மின்னஞ்சல் palaivanathoothu@gmail.com புதிய முகவரி www.paalaivanathoothu.tk , மின்னஞ்சல் paalaivanathoothu@gmail.com
வாசகர்கள் இந்த புதிய முகவரிக்கும் வருகை தந்து தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

23/10/09

நான் கிரிக்கெட் வீரன், பயங்கரவாதி அல்ல- பர்வேஸ் ரசூல்

1 கருத்துகள்
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன், பயங்கரவாதியல்ல" என்று கூறியுள்ளார்.
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது.
கடந்த 17 அக்டோபர் 2009 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.
இதில் ஒருவரான பர்வேஸ் ரசூல்,ஜம்மு காஷ்மீர் அணிக்காக 3ஆம் நிலையில் களமிறங்கி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்து, தன் மீது சுமத்தப்பட்ட சந்தேகக்கணைக்குப் பெங்களூர் ஸ்டேடியத்திலேயே பதிலளித்தார். அவர் 50 ரன்களை எடுத்தபோது பர்வேஸ் ரசூலை பாராட்ட பெவிலியனில் அணி முழுதும் திரண்டு எழுந்து நின்று கரகோஷம் செய்தது. பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது, "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க விரும்பினேன்; பயங்கரவாதியல்ல, நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம்" என்றார்."அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை, என்ன நடந்தது என்பது பற்றி நான் ஆச்சரியமடைந்தேன். இதனால் இங்கு கிரிக்கெட் விளையாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர்கள் என்னை கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு கூறினர்" என்று தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேளையில் தன் நிலைமையினைக் குறித்து கூறினார்.
இதே போன்ற எண்ணம் ஜம்மு காஷ்மீர் அணிப் பயிற்சியாளர் அப்துல் கயூமிற்கும் ஏற்பட்டது. "நானும் கிரிக்கெட் அணியை முதலில் இங்கிருந்து அழைத்துச் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த விஷயத்தை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் இங்கு தங்க முடிவு செய்தோம்.நாங்கள் காஷ்மீரி என்பதாலும், நாங்கள் சந்தித்து வரும் கடின காலங்களாலும், எங்கு சென்றாலும் எங்களை சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக மும்பை சென்று அங்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கிறோம்; அங்கும் இதனால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுவோம" என்று வருத்ததுடன் கூறியுள்ளார்
கயூம் பெங்களூர் காவல்துறையின் இந்த கைதை கண்டித்து போட்டியின் போது காஷ்மீர் வீரர்களை எதிர்ப்பின் அடையாளமாக கறுப்புத் துணியைக் கையில் கட்டிக் கொண்டு ஆடுமாறு பயிற்சியாளர் கயூம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."
மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை" என விமர்சகர்கள் கர்நாடகா அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
source:inneram

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!

0 கருத்துகள்
"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில் அதற்கு பங்குண்டா?" என்பது உட்பட விரிவாக விசாரணை நடத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள டிஜிபி, தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு கேரளத்தில் செயல்படுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை"எனவும் "அவ்வாறான ஒரு இயக்கம் கேரளத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இஸ்லாமிய மதத்திற்கு மற்ற மதத்திலிருந்து பெண்களை மதம் மாற்றும் செயல் நடைபெறுகிறதா? என்பதைக் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source:inneram

மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாசலில் காங். மீண்டும் வெற்றி- பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி

0 கருத்துகள்
புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.அங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
இம் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மகாராஷ்டிரத்தில் 288 மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மொத்தம் 144 இடங்களி்ல் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணியான சிவ சேனா 90 இடங்களி்ல் மட்டுமே வென்றுள்ளன. குறிப்பாக சிவசேனாவுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி 13 இடங்களிலும் பிற கட்சிகளும், சுயேச்சைகளும் 39 இடங்களிலும் வென்றுள்ளன. இதன்மூலம் ராஜ் தாக்கரே கட்சி முதன்முதலாக சட்டசபையில் அடியெடுத்து வைக்கிறது.ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
மும்பை, தானே, புனே உள்ளிட்ட இடங்களில் சிவசேனா-பாஜகவின் தோல்விக்கு ராஜ் தக்கரேவின் கட்சி தான் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் தோல்விக்கு நவ நிர்மாண் வேதிகே தான் காரணமாக அமைந்தது. குறிப்பாக சிவசேனாவின் வாக்குளை ராஜ் தாக்கரே சிதறியடித்து சின்னாபின்னாவாக்கிவிட்டார். மேலும் தேவைப்பட்டால் காங்கிரஸ்-பவார் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரவும் தயாராக இருப்பதாக தேர்தலுக்கு முன்பே ராஜ் தாக்கரே கூறியது குறிப்பிடத்தக்கது.பால் தாக்கரேவின மகனும் சிவசேனா செயல் தலைவருமான உத்தவ் தாக்கரவைவிட ராஜ் தாக்கரேவுக்குத் தான் இளைஞர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளதாகவும், ராஜுடன் கைகோர்ப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் சரத் பவாரும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஹரியாணா
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மொத்தமுள்ள 90 இடங்களில் அக்கட்சி 40 தொகுதிகளில் வென்று்ள்ளது.ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தள் கட்சி 32 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் மற்றவர்கள் 14 தொகுதியிலும் வென்றுள்ளனர்.
ஹரியாணாவில் காங்கிரஸைச் சேர்ந்த புபிந்தர் சிங் ஹோடா முதல்வராக உள்ளார். அவரே அடுத்த முதல்வராகவும் தொடர்வார் என்று தெரிகிறது.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரசேத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளி்ல் காங்கிரஸ் கட்சி 48 இடங்களிலும், மற்ற மாநில கட்சிகள் 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்க உள்ளது. இப்போது அருணாசல் பிரதேசத்தில் தூர்ஜி கண்டும் முதல்வராக உள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற பின்னர் சந்தித்துள்ள முதல் சட்டசபைத் தேர்தல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்துள்ள முதல் பெரிய தேர்தல் என்பதால் மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போல இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்பட்டன. இந்த வெற்றிகளின் மூலம் மத்தியில் காங்கிரசின் செல்வாக்கு மேலும் உயர்ந்துள்ளது.உட்கட்சிப் பூசல்களால் தத்தளித்து வரும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் பெரும் பின்னடைவைத் தரும் என்று தெரிகிறது.

21/10/09

ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கி 6பேர் பலி

1 கருத்துகள்
ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6பேர் பலியாயினர்.
இன்று(அக்:21) மதியம் 2மணியளவில் ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்திலிருந்து சூடான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு சிறிதுதூரம் உயரே சென்றதும் கீழே விழுந்து நொறுங்கியது.இதில் பயணித்த விமானிகள் உட்பட 6பேர் பலியாயினர். விபத்திற்காண காரணம் தெரியவில்லை.
source:Gulfnews

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

1 கருத்துகள்
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார்.52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்.
source:thatstamil

பாட்னா மத்ரஸாவில் பயங்கர குண்டு வெடிப்பு இந்துத் தீவிரவாதிகளின் சதியா?

2 கருத்துகள்
பாட்னா ஹரியனாவில் அமைந்துள்ள மத்ரஸா இஸாத்துல் உலூம் ஹிந்த். இங்கு 65 மாணவர்கள்,6 ஆசிரியர்கள் என 10 அறைகள் உள்ளன.

நேற்று 20-10-2009,இரவு 9 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்த்தது.
இதில் மத்ரஸவின் பின் பகுதி,ஹாஸ்டல் ரூம் , மத்ரஸாவின் அலுவலகம் உட்பட பல பகுதிகள் இடிந்தன. இந்த சம்பவம் இஷா (இரவுத் தொழுகை) தொழுகைக்கு சற்று பின் நடந்த்ததால் உயிர் சேதம்,படுகாயம் ஏதுவும் இல்லை.
மத்ரஸா ஆசிரியர் மவுலானா நவ்சாத் அஹ்மத் அளித்த பேட்டியில் மத்ரஸாவை சுற்றி 2 கி.மீ. வரை நில நடுக்கம் போல் அதிர்ந்த்ததாகவும்,அந்த இடம் சுற்றி புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தெறிவித்தார். இதனை இந்துத் தீவிரவாதிகள் செய்த சதியாக இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
source:twocircles

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை

0 கருத்துகள்
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.

சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிந்த CBI அது தொடர்பாக பலரை கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தூர் நகருக்கு வந்து இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டுவெடிப்பில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் இயக்கங்களே காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
CBI ன் இந்த விசாரணையின் மூலம் சங்பரிவார் அமைப்பினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
source:webdunia

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

0 கருத்துகள்
கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.
source:inneram

உலகின் இளம் தலைமையாசிரியர்!

0 கருத்துகள்
கோல்கத்தா, அக். 18: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத்தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).
குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார். ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.

அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு
நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.
டீச்சர் -பாபர்அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!
பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.
சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

source:நண்பர்கள் அனுப்பிய இமெயில்

19/10/09

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட அறிமுக விழா

2 கருத்துகள்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அறிமுக விழா டெல்லியிலும்,பல்வேறு மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 18ம் தேதி நடைபெற்றது.

அதன்படி சென்னையில் சரியாக மாலை 4மணியளவில் மாபெரும் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் வரை சென்றது.
பேரணிக்கு மாவட்டத் தலைவர் திரு.p.முகம்மது ஹூசைன் தலைமையேற்று துவக்கிவைத்தார். மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு.ஏ.அஹமது பாஷா முன்னிலை வகித்தார். SDPI பிரதிநிதி திரு.இ.முஹம்மது ரஷீது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மாலை 4மணிக்கு மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி.S.அமீர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு.M.ஹஸன் அப்துல் வாரிப் அவர்களும், SDPI பிரதிநிதிகள் திரு.M.முகம்மது அன்ஸாரி, திரு.S.M.சவுந்தராஜன், திரு.S.அப்துல் அஜீஸ், திரு.K.வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.M.முகம்மது புஹாரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் திரு.V.பாலு அவர்கள், சமூகசேவகர் K.M.ஷாஹூல் ஹமீது அவர்கள், சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபர் டாக்டர்.திரு.R.K.முஹைதீன் ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.J.முஹம்மது நாஜிம் அவர்களும், மாவட்ட தலைவர் திரு.முஹம்மது ஹூசைன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.A.அமீர் சுல்தான் அவர்கள் நன்றியுரையாற்றினார். பேரணியிலும்,பொதுகூட்டத்திலும் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டம் சுமார் 10மணியளவில் முடிவுற்றது.

நரோடா பாட்டியா கலவரத்தில் தொடர்புடையவனுக்கு ஜாமீன் மறுப்பு

1 கருத்துகள்
"95 பேரை பலி கொண்ட நரோடா பாடியா வழக்கு இந்த நவீன உலகில் தனித்துவமானது என்றும் இந்த சம்பவம் சட்டத்தின் அடித்தளத்தையே பலவீனமடைய செய்திருக்கின்றது" என்றும் குஜராத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அபிலாஷா குமாரி கூறியுள்ளார்.

இவர் இதனை, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயின் ஜாமீன் மனுவை ரத்து செய்து விட்டு இதனை கூறினார். இந்த சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு கடந்த நவம்பர் மாதம் கைது செய்தது.

"இந்த வழக்கு மற்ற எந்த ஒரு சாதாரண வழக்கு போன்றதல்ல. இந்த வழக்கின் பின்னணி பொதுமக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது. உண்மையில் இந்த வழக்கு பல மக்களை வேண்டுமென்றே கொன்று குவித்ததில் தொடர்புடையது. இன்றைய நவீன காலத்தில் இது போன்று வேறு எந்த நிகழ்வுகளும் நடந்ததில்லை. இது போன்ற சம்பவங்கள் மக்கள் மீதும் தேசத்தின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று அந்த நீதி மன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஜி, ஹுசைன் நகர் மக்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடையவன். இந்த சம்பவத்தில் 95 உயிரிழந்தனர்.
source:Times of india,thapalpetti

18/10/09

கோவாவில் குண்டுவெடிப்பு ஹிந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு

0 கருத்துகள்
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மர்கோவா என்ற நகரில் நேற்று இரவு இரு சக்கரவாகனத்தில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். படுகாயங்களுடன் ஒருவர் கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலியான பாடீல் என்ற நபர் மாலேகான் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிராக்யா சிங்கின் அபினவ்பாரத் என்ற ஹிந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் இது பற்றி கூறுகையில்,குண்டுவெடிப்பிற்கு சனாதன் ஷவுன்ஸ்தா என்ற அமைப்புக்கு தொடர்பிருப்பதாகவும் போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நடந்த இடம் கிரேஸ் என்ற கிறிஸ்தவதேவாலயத்திற்கு அருகில் எனவே ஏதேனும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என்பதால் போலீசார் இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
source:twocircles

17/10/09

சந்தூக் பயணம்- இந்தப் பயண விவரம்,சிரிப்பதற்கு;அல்ல சிந்திப்பதற்கே!!

0 கருத்துகள்
இந்த பயண விவரத்தை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். source: சமரசம்

15/10/09

யு.ஏ.இ , சார்ஜாவில் கட்டுமான பில்டிங்க் இடிந்தது

0 கருத்துகள்
சார்ஜா அபுசஹாரா ஏரியாவில் (பழைய கார்கள் விற்கும் ஏரியா) நேற்று மதியம் சரியாக 12.30 க்கு கட்டுமான கட்டிடம் ஒன்று சரிந்தது. ஒரு மாடி மட்டும் கட்டி இருந்த இந்த கட்டிடம் கார் பார்க் பில்டிங் ஆகும். இதனால் 6 பேருக்கு காயங்கள் ஏற்ப்பட்டதாகவும், அதில் 2 பேருக்கு மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது, மேலும் பல தொழிளாலர்கள் உணவு இடைவேளையில் சென்றதால் பல உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் காயம் அடைந்தவர்கள் குவைத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
source:Gulfnews

கோவிலுக்குள் நுழைய தலித்களுக்கு உரிமை மறுப்பு - வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு

0 கருத்துகள்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர். எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 ரவுண்ட் வானத்தை நோக்கி சுட்டானர்.இதையடுத்து கூட்டம் கூட்டம் கலைந்து ஓடியது. அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
source:thatstamil

உலகம் முழுவதும் பட்டினியில் 1 கோடி மக்கள்!

0 கருத்துகள்
நைரோபி: உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவிக்கிறது.

ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர் கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.
உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.
உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.
சோமாலியாவில், வன்முறை யும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக உள்ளது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நெடு நாட்களாகி விட்டது. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தை களில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.

1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் போதுமானதாக இல்லை.
உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளனர்.
source:thatstamil

இனி முதலில் அணு ஆயுத தாக்குதல்: ரஷ்யா

0 கருத்துகள்
மாஸ்கோ: தன்னை யாராவது தாக்குவார்கள் என நினைத்தால் அந்த நாட்டின் மீது முன்னெச்சரிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது என்ற முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது.
தனது பாதுகாப்பு குறித்த கொள்கையில் ரஷ்யா செய்யவுள்ள இந்த மாபெரும் மாற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தி, எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்துள்ள ரஷ்யா தனது பாதுகாப்புக் கொள்கையில் இதற்கான திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.

இந்த திருத்தத்தை செய்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அதை அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலே பட்ருஷே உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ரஷ்யாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பாதுகாப்புக் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் தேவையில்லாமல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபடாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்துவோம் என்றார்.

விளாடிமிர் புடின் ரஷய அதிபராக இருக்கும்போது தான் இந்தத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் ரஷ்ய பிரதமராகிவிட்டார். ஆனாலும், அவர் நியமித்த மெத்வதேவ் தான் அதிபராக உள்ளார். இப்போதும் நாட்டை வழி நடத்துவது புடின் தான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ரஷ்ய அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் தான் புடின் அந்தப் பதவியிலிருந்து விலகினார். ஆனால், அவர் பதவி விலகும்போதும் அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போதும் உள்ளது.
இந் நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

அரசு முறைப் பயணமாக ரஷ்யா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவக் கொள்கையில் இடம் இல்லை என்று மட்டும் கூறினார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதி்ல்லை என்ற கொள்கை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil

பொதுத் துறை நிறுவனங்களுக்கு யு.எஸ். நிறுவனங்கள் லஞ்சம்: விசாரணைக்கு உத்தரவு

0 கருத்துகள்
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து வாணிப வாய்ப்புகளைப் பெறுவதற்காக, அந்நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் மீது மத்திய புலனாய்வுக் கழகம் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் விவரங்களை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஊடகங்களுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.மீரா சங்கர் எழுதிய கடிதத்தின் நகலை ஊடகங்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்டது. அந்தக் கடிதத்தில் மராட்டிய மாநில மின்சார வாரியம், இந்தியன் இரயில்வே, மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விவரம் கோரியுள்ளது.இந்திய பொதுத் துறை நிறுவனமான மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்திற்கு அமெரிக்க நிறுவனமான டோவ் ஆக்ரோ சயின்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14/10/09

எச்சரிக்கை!! படித்த செய்தி: ஆபாச ஊடகத்ததால் வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது!

0 கருத்துகள்
எச்சரிக்கை!! எச்சரிக்கை!!
ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற நிலையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.ஆம். ஒன்பதே வயதான அந்த சிறுவன், தன்னுடன் விளையாடிய 6 வயது சிறுமியை, வீட்டில் அவர்களின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனரான சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 376 (கற்பழித்தல்) பிரிவின் கீழ் அந்த சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்நிலையத்தில் ஒருநாள் இருந்த அவனை, சிறுவர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் 10 வயதான மாணவர்கள் 3 பேர் சேர்ந்து, அவர்கள் படித்த பள்ளியைச் சேர்ந்த 4 வயதான மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஓரிரு தினங்களில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 9 வயதான சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.

இண்டோரா அருகே ஜலோரா மொஹல்லா என்ற இடத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்கு ஒன்றாக வருபவர்கள். பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுபவர்கள்.கடந்த ஞாயிறன்று இதேபோல சிறுமியின் வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.அப்போது திடீரென்று அந்த சிறுவன் குளியலறைக்குள் சிறுமியை இழுத்து, அந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி மறுத்த போதிலும் அடித்து பணிய வைத்துள்ளான்.சிறுமி, சிறுவனை எதிர்த்துப் போராடியதன் காரணமாக சிறுவனின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.சிறுமியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பியதும், சிறுமி அழுது கொண்டிருப்பதை அறிந்து விசாரித்துள்ளனர். சிறுமிக்கு இரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது.இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவனையும், சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதில் சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்தே உனா என்ற இடத்தில் உள்ள சிறுவர்கள் நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.

பொதுவாக 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைப் பருவம் மாறாத ஒரு சிறுவன், தன்னுடன் விளையாடும் சிறுமியை பாலியல்ரீதியில் துன்புறுத்தத் தூண்டியது எது?பெற்றோரின் அலட்சியப் போக்கு என்பதுடன், அவர்கள் வாழும் சூழல், பார்க்கும் காட்சிகள், பழகும் நண்பர்கள் என்று எண்ணற்றவற்றைக் கூறலாம்.அதற்கேற்ப இன்றைய வளர்ந்து விட்ட, தொலைக்காட்சி ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் காட்சிகளும் பிஞ்சு மனதில் ந்ஞ்சை விதைக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?இதற்கு ஒரே தீர்வு ஊடகங்கள் ஆபாசத்தை நிறுத்த வேண்டும். அல்லது நம்குழந்தைகளை அதை விட்டு நாம் காக்க வேண்டும்.

அல்பேனியா நாட்டு மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள்

0 கருத்துகள்
2005 ல் நடத்தப்பட்டு வெளியிடப்படாத கருத்துக்கணிப்பு ஒன்று அல்பேனிய மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளது. இந்த சதவிகிதம் முன்பு இருந்ததை விட அதிகம்.
National Institute for Statistics 2005 ல் நடத்திய The Multiple Indicator Cluster Survey அல்பேனிய மக்களின் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் அந்த மக்களின் மதம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.மொத்தமாக 5000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 79.9% மக்கள் இஸ்லாமியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 70% மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் 20% மக்கள் கிறித்தவர்கள் என்றும், 10% மக்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.புதியதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சில மக்கள் திரானாவை மையமாக கொண்ட சியா பெக்தாசி இஸ்லாம் என்ற வழிபாட்டிலும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தனி மதம் என்பதாகக் கூறப்படுவதால் இது இஸ்லாமிய மக்கள் தொகையில் சேர்க்கப்படவில்லை.
அல்பேனியாவில் 1967 ல் நடந்த கம்யூனிச ஆட்சியின் போது வணக்க வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. நவம்பர் 1990 ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை பின்பற்ற தொடங்கினர். அன்றிலிருந்து அல்பேனியா இஸ்லாமிய நாடா இல்லையா என்ற விவாதம் வலுக்கத்தொடங்கியது. இப்போது கிடைத்த இந்த கருத்துக்கணிப்பு முடிவின் படி முஸ்லீம்கள் மொத்தமுள்ள 3.1 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து அல்பேனியாவிற்கு வந்த ஒரு மில்லியன் மக்களை கணக்கில் சேர்க்கவில்லை.
source:ABNA

உய்குர் முஸ்லிம்கள் 6 பேருக்கு மரண தண்டனை

0 கருத்துகள்
"உய்குர் முஸ்லிம்கள் 6 பேருக்கு மரண தண்டனை கொடுப்பது உய்குரின் பிரச்சனைக்கு முடிவு காணும் வழி அல்ல, மாறாக இது மக்களிடையே கோபத்தை தூண்டி பிரச்னையை இன்னும் அதிகமாக்கும்" என்று நாடுகடத்தப்பட்ட உய்குர் மக்கள் பிரிவின் தலைவர் ரெபியா கதீர் தெரிவித்தார்.

பல வருடங்களாக சீனாவின் சிறைகளில் இருந்த இவர் தனது நியுசிலாந்து பயணத்தின் போது, "மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஆறு பேர்களின் விசாரணை சீன சட்டதின்படியோ அல்லது சர்வதேச சட்டத்தின் படியோ நீதமாக நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
"இது அந்த பகுதியில் அமைதியையும் நிலையான தன்மையையும் உருவாக்கப்போவதில்லை, மாறாக உய்குர் மக்களை இது கோபமுறச்செய்யும்" என்று அவர் கூறினார். இந்த செய்தியை அவர் 6 பேரின் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தினத்தின் மறுநாள் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஆறு பேரும் கடந்த ஜூலை மாதம் உய்குரின் ஜிங்க்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தின் போது மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடந்த கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உய்குர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட சீனாவின் ஹான் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு பேர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பெயர்களின் அடிப்படையில் அவர்கள் உய்கூரை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றது.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொம்மை தொழிற்சாலையில் வேலைசெய்த பணியாளர்கள் தாக்கப்பட்டு இரண்டு பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
இந்த தீர்ப்பினை அடுத்து உரும்கி பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கிடைத்த தகவலின் படி ஏறத்தாழ 700 பேர் கலவரம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
source:Aljazeera,thapalpetti

எழுத்துப் போராளி இலக்கியத் தென்றல் பேராசிரியர் இக்பால் அன்ஸாரி காலமானார்

0 கருத்துகள்
தன்னுடைய எழுத்து திறமையின் மூலம் இந்திய முஸ்லிம்களின் உரிமைக்கும் அவர்களை கல்வியில் மேம்படுத்தவும் தன் வழ்நாளில் அதிக நேரத்தை செலவழித்த, உரிமைகளின் பாதுகாவலர் பேராசிரியர் இக்பால் அன்ஸாரி மாரடைப்பால் நேற்று (செவ்வாய் கிழமை) காலமானார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)
டெல்லியை சேர்ந்த இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் வகுப்புவாதம்,மத சுதந்திரம் சார்ந்த பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய இந்தியாவில் மனித உரிமைகள், இந்திய சட்டத்திற்கு அப்பாற்பட்ட மத கலவரங்கள், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை, பொலிடிக்கல் ரெப்ரென்டேஷன் ஆஃப் முஸ்லிம் இன் இந்தியா 1952-2004 போன்ற புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.
source:twocircles

13/10/09

மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேன்!

0 கருத்துகள்
உடல் முழுவதையும் நிர்வாணமாகக் காட்டும் ஸ்கேனர் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்லும் நபரின் மறைவு அங்கங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும். இதன்மூலம் ஆயுதங்கள் மறைத்து எடுத்துச் செல்வது எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்கேனர் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் இவை தவறாகப் பயன்படுத்த மாட்டா என்றும் விமான நிலையத்தை நடத்தும் BAA நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் இந்த ஸ்கேனர் வழியாகச் செல்லும் போது கோட் போன்ற உடைகலைக் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பயணிகள் விரைவாகப் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து செல்ல இயலும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஸ்கேனர்கள் வெளியிடும் கதிரியக்கம் மனித உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது தான் என்றும் மான்செஸ்டர் விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்ல மறுத்தால் அவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த ஸ்கேனர் குறித்துப் பயணிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
source:inneram

வக்ஃப்போர்டு சொத்துக்கள் - கார்ட்டூன்

0 கருத்துகள்
source:twocircles

ஜனநாயக தூண்களே சற்று சிந்திப்பீர்!

0 கருத்துகள்
நம் இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஒவ்வொரு துறையும் தத்தமது கடமைகளை சரிவர செய்திருக்குமேயானால் இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால் ஒவ்வொரு துறையும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
நாடாளுமன்றம்:
நாடாளுமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் களையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் தற்போது மிகவும் அற்பமாகவே காணப்படுகிறது. சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளூமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருமானத்தினை சட்டப்பூர்வமாக பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.
அரசு நிர்வாகம்:
இதில் மிகப்பெரிய வேடிக்கைதான் அரங்கேறுகிறது. மத்திய அரசு அதிகாரம் வாய்ந்ததா? இல்லை மாநில அரசுகள் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் அரசுகளூம் குழம்புகின்றன மக்களையும் குழப்புகின்றன. இருவருக்கும் உள்ள மிகபெரிய உடன்படிக்கையானது மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கினை மாநில அரசுகள் கண்டுக்கொள்ளக்கூடாது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப்பயிற்சியை தடுக்க மறுப்பது உட்பட அதுபோல் மாநில அரசுகளின் முஸ்லிம் விரோத போக்கினை மத்திய அரசு அலுவல்ரீதியாக கேள்விக்கேட்கக்கூடாது மாநில அரசுகள் அரங்கேற்றும் போலி என்கெளன்டர்கள் உட்பட.
இந்த அதிகாரபூர்வமற்ற உடன்படிக்கையை இரு அரசுகளும் தீவிரமாக கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய பெண்களின் கற்பினை சூரையாடுவதையும், இஸ்லாமிய பச்சிளங்குழந்தைகளின் இரத்ததினை உறுஞ்சுவதையுமே தங்களது அரசின் கொள்கைகளாக கடைப்பிடித்துவரும் அமெரிக்காவிற்கும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலிற்கு காவடி தூக்கும் மத்திய அரசின் இஸ்லாமிய விரோத வெளியுறவுக்கொள்கை குறித்து எந்த மாநில அரசுகளும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோல் உலக வரலாறு கண்டிராத கொடூரமான இஸ்லாமியர்களுக்கெதிரான படுகொலையையின் போதும் அதனை அரங்கேற்றியது நரவேட்டை நரேந்திர மோடி தலைமையிலான கும்பல்களே என பல விசாரனை அறிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டிய போதும் கண்டுக்கொள்ளாதது போல் இருப்பதற்கும் அதிகாரபூர்வமற்ற இவ்வுடன் படிக்கையே காரணமாக இருக்கிறது. இதன் மீதும் கேள்விகள் தொடுப்பது பயனளிக்காது.
ஊடகத்துறை:
வருமானம், மேலும் வருமானம், மேலும் மேலும் வருமானம் இதுவே தற்போதைய ஊடகத்துறையின் தாரக மந்திரம். சமுதாய நலன், சத்தியம், நேர்மை போன்ற ஊடகத்துறைக்கு தேவையான முக்கிய காரணிகளை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மறந்துவிட்டன. மறுத்துவிட்டன. விறுவிறுப்புகளையும், சாதாரண மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதைனைகளை வியாபாரமாக்குவது, நடிகைகளைப்பற்றி ஆல அமர விவாதிப்பது, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களூகெதிராக அவதூறுகளை பரப்புவது இவையே நவீன கால ஊடகங்களின் அடையாளங்கள்.
இஸ்லாமியர்களுக்கெதிராக உலகில், இந்திய நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைப்பதுதான் தங்களின் தலையாய கடமை என்று தங்களது எஜமான அமெரிக்காவும் அதன் சார்ந்த ஊடகங்களும் தங்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்றே ஊடகங்கள் செயல்படுகின்றன. உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் பலவற்றுக்கும் ஊடகத்துறையே ஒருவகையில் காரணமாக இருப்பதனை யாரும் மறுக்க இயலாது. சுய சிந்தனை, ஆழமான விசாராணை, நிடுநிலைமை போன்றவற்றில் ஊடகத்துறையினர் உறுதியாக இருந்திருப்பார்களேயானால் இந்திய ஜனநாயகம் செழித்திருக்கும். ஆயிரக்கணக்கான பிரச்சனைகளும், குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தங்களின் மண்ணிற்காக போராடும் காஷ்மீர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்தும், தன் சொந்த மக்களையே கொன்று குவித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை புலிகள் என்று கூறியும் தங்களின் பாசிச சிந்தனையை பரைச்சாற்றுவதனை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக்கொள்வார்களேயானால் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று வலுவோடு இருக்கும். மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளையும், தகவல்களையும் அப்படி வாந்தி எடுக்கும் இவர்களிடம் நியாயம், நீதி தொடர்பாக கேள்வி எழுப்புவதும், எழுப்பாமல் இருப்பதும் சமமே.
நீதித்துறை:
மற்ற மூன்று துறைகளை ஒப்பிடுகையில் நீதித்துறையானது முக்கியமான் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் நீதி என்பது விலையுயர்ந்த ஒன்றாகவும், சாதாரண மற்றும் பாமர மக்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகவுமே மாறிவிட்டது. மற்ற மூன்று துறைகளும் எப்படி தங்களின் கடமையிலிருந்து வழிகெட்டு சென்றுவிட்டதோ அதுபோலவே நீதித்துறையானதும் தமது கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வழித்தவறி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்புடைய விஷயங்களில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகமாகவே காணப்படுகிறது. சில நீதிபதிகள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற நினைக்கும் போது மற்ற சக நீதிபதிகள், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் போவது மிகவும் வேதனையான ஒன்று.
உண்மையிலேயே நீதித்துறை என்ற தூணிற்கு அதிகாரம் இருக்குமேயானால் ஊழல் அரசியல்வாதிகள் கோலோச்சவும் இயலாது, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய இஸ்லாமிய விரோத இயக்கம் அரசின் நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கவும் முடியாது. ஒரு சாதாரண குடிமகனாகவும், நீதியையும் இந்திய நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு இஸ்லாமியனாகவும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தினை தாங்கும் நீதித்தூணை நோக்கி சில கேள்விகளை முன்வைப்போம்.
1) பொடா என்ற கருப்பு சட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதை அனைத்து நீதிபதிகளும் நன்கு அறிவர். ஆனால் அந்த கருப்பு சட்டமே இல்லாமல் போனப்பிறகும் இன்னும் அந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறைகளில் வதைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
2) பொடாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மீதுக்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே பிறகு ஏன் இன்னும் அவர்கள் சிறையில் வதைப்படவேண்டும்?
3) குறிப்பாக கோத்ராவில் இரயிலை எரித்ததில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிருந்தவர்கள்தான் இரயில் எரிப்பிற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் இரயில் எரிப்பினை காரணம்காட்டி அப்பாவி இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனரே அவர்களை விடுவிப்பதில் ஏன் நீதிமன்றங்கள் தலையிடமறுக்கிறது?
4) உலக சரித்திரம் கண்டிராத குஜராத் அரசின் இஸ்லாமிய விரோத இனப்படுகொலைக்கு காரணம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்தான் என கூறப்படும்போது, அந்த இரயில் எரிப்பு சம்பவம் பற்றி ஏன் முழு விசாரனையில் ஈடுபடவில்லை? சி.பி.ஐ. விசாரனைக்கு மத்திய அரசிற்கு ஏன் அறிவுறுத்தவில்லை?
5) இரயிலை எரித்ததில் வெளியில் இருந்த இஸ்லாமியர்களூக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிர்ருந்தவர்களே என்று யு.சி.பானர்ஜியின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுப்பதேன்?
6) ஒன்றும் அறியா அப்பாவி இஸ்லாமிய பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்டு கொன்றது பற்றியும், ஆயிரக்கணக்கில் குழந்தைகள், முதியவர்கள் என கொல்லப்பட்டது குறித்தும் முன்னின்று விசாரனை நடத்த தயங்குவது ஏன்?(கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியகள் என்ற அலட்சியத்தாலா?)
7) இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய நரவேட்டை நரேந்திர மோடியை “நீரோ மன்னன்” என்று வர்ணித்ததோடு நின்றுவிடாமல் நரேந்திர மோடியை, அவரது சகாக்களையும், அவரின் குருநாதர்களையும் சட்டத்தின மூலம் தண்டனை வாங்கிதர தயங்குவது ஏன்? அதற்கு தடையாக இருப்பவர்களை உலகில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அதிகாரம் இல்லையா?
8) குஜராத நரவேட்டையை நாங்கள்தான் நடத்தினோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் கற்பழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் விதவைகளாக்கினோம், ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம், நூற்றுக்கணக்கான இஸ்லாமியகளின் வழிபாட்டுதளங்களை நாங்கள்தான் இடித்துத் தரைமட்டமாக்கினோம், பெண்களை பிறப்புறுப்புகளை நாங்கள்தான் கிழித்தெறிந்தோம், கற்பினி என்றுகூட பாராமல் அவளின் வயிற்றை கிழித்து அதிலிருந்த கருவினை தீயிட்டு கொழுத்தியதும் நாங்கள்தான் என்று தெஹல்கா நிருபரின் முன் வெட்கமின்றி தங்களின் குற்றத்தினை பெருமையுடன் ஒப்புக்கொண்ட நரவேட்டை நரேந்திரமோடியின் சகாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை நமக்கேன் வம்பு என்று உங்கள் கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்களா?
9) குற்றவாளிகளே தங்களது குற்றத்தினை ஒப்புக்கொண்ட பிறகு வேறு என்ன சாட்சி வேண்டூம் உங்களுக்கு?
10) சொராபுதீன் ஷேக் என்ற அப்பாவி இஸ்லாமியன் குஜராத் காவல்(?)துறையினரால் தீவிரவாதி பட்டம் சுமத்தி கொல்லப்பட்ட போது மெளனம் சாதித்தீர்கள். ஆனால் சொராபுதீன் ஷேக் ஒரு தீவிரவாதி அல்ல அவர் இஸ்லாமியன் என்ற காரணத்தினாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று விசாரனை அறிக்கை தெளிவுபடுத்திய போதும் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் காலம் தாழ்த்துவது சொராபுதீன் ஷேக் போன்ற சாதாரன அப்பாவி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்று தோன்றவில்லையா?
11) இஷ்ராத் ஜெகான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் நரேந்திர மோடியின் காவல்(கூலி)படையினால் கொல்லப்பட்டதும் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால்தான் என்று விசாரனை அறிக்கை தெளிவாக கூறிய பின்பும் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவது எதனால்?
12) சொராபுதீன் ஷேக், இஷ்ராத் ஜெகான் போன்ற நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துகளில் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் கொல்லப்பட்டனர் என்று விசாரனை அறிக்கைகள் தெளிவுபடுத்தியபோது அதே பத்திரிக்கைகள் மெளனம் காப்பது பற்றி அவர்களுக்கு நல்ல அறிவுரையும், ஒரு நெறிமுறையும் வழங்கி தங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலுசேர்த்தாலென்ன?
13) ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கி பயிற்சிகள் மேற்கொள்வதை பத்திக்கைகள் படம்பிடித்து காட்டுகின்றனவே (படங்களை வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றன. இதுவே இஸ்லாமியர்கள் செய்திருந்தால் கற்பனைகதைகள் சிறகடித்து பறந்திருக்கும்) இதன் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட தயங்குவது ஏன்? இஸ்லாமியர்களை கொல்வதற்காக ஆயுதப்பயிற்சி எடுப்பதை பார்த்துவிட்டு, அந்த பயிற்சியினை பயன்படுத்தி இஸ்லாமியர்களை கொன்றபிறகு பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடர்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
14) இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார அமைப்புகளே காரணம் என்ற உண்மையை வெளி உலகிற்கு ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுகாட்டிய குஜராத்தின் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரே அதுபற்றி ஏன் ஆழமான விசாரனை நடத்தவில்லை?
15) கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு சங்பரிவாரத்தின் மீதான விசாரனை என்ன ஆனது. உச்ச நீதிமன்றமே முன்னின்று விசாரனை நடத்துவதில் என்ன நடைமுறை சிக்கலும், தயக்கமும் இருக்கிறது.
16) குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனையின் அளவைவிட அதிகமாகவே விசாராணை என்ற பெயரில் அனுபவித்து வரும் அப்பாவி இஸ்லாமியர்களை சிறைகளிலிருந்து விடுவிக்காதது ஏன்?இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கேள்விக்கனைகள் நீதித்துறையை நோக்கி அணிவகுத்து நிற்கின்றன.
இது எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அர்ப்ப காரணத்தினைக்கூறி நீதித்தூனானது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீதித்துறை கட்டளையோ, அறிவுரையோ இடுமேயானால் அதனை தட்டிகேட்பவர்கள் எவருமில்லை. ஏனெனில் இந்தியாவில் தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு குடிமகனான யாருக்கும் உரிமையில்லையே.
நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ஊடகத்துறை ஆகிய மூன்று தூண்களை விட்டுவிட்டு நீதிதூணிற்கு முன்பு இந்த நியாயமான கேள்விகளை வைப்பதற்கு நீதித்துறை என்ற தூணிற்கு மட்டுமே இன்னும் உயிரும், உணர்ச்சியும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தானேயொழிய வேறு காரணங்கள் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தூண்களுக்கும் மக்களின் மனதில் இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் நீதிதூணின் மீது இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறது.
நாம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை சாதாரன மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை ஏதோ ஒன்றாவது செயலில் தராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான சாதாரன மக்களில் ஒருவன்.

Article: Faizur U.A.E
source:thapalpetti

ஈரான் மூத்த விஞ்ஞானி ஷஹ்ரம் அமீரி எங்கே? மர்மம்...!!!

0 கருத்துகள்
ஈரான்: ஈரானிய விஞ்ஞானி ஷஹ்ரம் அமீரி திடீரென காணாமல் போனதற்கு பின்னால் அமெரிக்காவுடைய கை இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
அமீரி ஈரானின் அணு சக்தி திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஈரானின் ISNA செய்தி நிறுவனம் கூறியதாவது, "ஷஹ்ரம் அமீரி கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பும் போது காணாமல் போனதாக கூறியது. இவர் சவூதி விமான நிலையத்தில் சவூதி அரேபியாவின் காவல் துறையினர்களால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்" என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த செய்தி நிறுவனம், "ஷஹ்ரம் அமீரி ஈரானின் அணு சக்தி நிலையத்தின் தொழிலாளர் என்றும் இவர் வெளி நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு எண்ணிக்கொண்டிருந்தார்" என்றும் கூறியது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மொட்டாகி இதனை மறுத்துள்ளார். மேலும் அவர், "அமீரி காணாமல் போனதற்கு அமெரிக்கா தான் காரணம் என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்கள் கிடைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை மறுத்த அமெரிக்கா அவரைப் பற்றி எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று மறுத்துள்ளது. ஈரான் ரகசியமாக கட்டிவந்த யுரேனியம் செறியூட்டப்படும் வசதி ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் தான் இவர் காணாமல் போயுள்ளார். பூமிக்கு அடியில் எழுப்பப்பட்டு வரும் இந்த ஆலையை ஈரான் ரகசியமாகவே வைத்திருந்தது. இதனை மேற்கத்திய அரசுகள் மோப்பம் பிடித்ததும் ஈரான் அதனை ஒப்புக்கொண்டது.
source:Aljazeera

குஜராத்: மோடி அரசு மீண்டும் அட்டூழியம். கபர்ஸ்தான்களை அழித்து சாலை அமைத்தது

0 கருத்துகள்
முஸ்லிம்களை சித்திரவதை செய்தவர்கள், முஸ்லிம் பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்தவர்கள்,முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், முஸ்லிம்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றியவர்கள் என ஒட்டு மொத்த சட்ட விரோத செயல்பாட்டிற்கும் முன்னோடிகள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொல்லும் குஜராத் அரசை நாம் எளிதில் மறக்க மாட்டோம்.
இது ஏதோ ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? இப்போதும் முஸ்லிம் இளைஞர்கள் எண்கொளண்டர் என்ற பெயரில் குறி வைத்து கொல்லப்படுகிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஆம் இப்படி குஜராத்தில் மக்கள் வாழ வழி இல்லை என்ற நிலை மாறி முஸ்லிம்கள் அடக்கஸ்தலங்களையும் கை வைத்து விட்டது இந்த பாசிச குஜராத் அரசு.
கபர்ஸ்தானின் பழைய தோற்றமும் அவ்விடத்தை அழித்து அமைக்கப்பட்ட சாலையும்.
(குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் வெளியே தெரியும் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்.)
தஹோத் மாநகரில் கோத்ரா ரோட்டில் மத்திய வக்பு வாரியத்துக்கு சொந்தமான கபர்ஸ்தான் உள்ளது. அதனை சுற்றி முஸ்லிம்களும் இன்ன பிற சமுதாய மக்களும் வசித்துவருகிறார்கள். கபர்ஸ்தான் மற்றும் குடியிருப்புகளை குஜராத் அரசு சட்ட விரோதமாக புல்டோசரை கொண்டு இடித்து தகர்த்தது. இம்மக்கள் வீடிண்றி வாழும் நிலையை உருவாக்கியது. மேலும் கபர்ஸ்தான் பகுதியை இடித்து அதன் மீது சாலையை அமைத்தது.
நகர முஸ்லிம்கள் இந்த சம்பவம் குறித்து சிறுபாண்மை அமைச்சரகம், சிறுபான்மை துறை அமைச்சர் சல்மான் குர்சித்,தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபாண்மை ஆணையம்,மாநில மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில வக்பு வாரியங்கள் ஆகிய ஆனையத்தில் எழுத்து பூர்வமாக முறையிட்டனர். மேலும் கொந்தளிப்பை உண்டாக்கும் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தும் படியும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
source:twocircles

12/10/09

உலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்

0 கருத்துகள்
உலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். 157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரி விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர். அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

10/10/09

புதிய தேசம் - அக்டோபர்'09

0 கருத்துகள்
புதிதாய் புதுதேசமாய்....

புதிய தேசம்>>>>>> பக்கம்>1>2>3>4

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவை இந்தியா முழுவதும் வலுப்படுத்த சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உறுதி

0 கருத்துகள்
தேசிய ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு, வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, தலித், மலைவாழ் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, இந்தியாவில் நீதியை நிலைநாட்டுவது என்ற முழக்கங்களோடு புதிதாக உருவாக்கப்பட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா செயல்படும் என்று கட்சியின் தலைவர் சேக் முஹம்மத் தெஹ்லான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் உருவாக்கப்பட்டு விட்டதாகவும் 1000க்கு மேற்பட்ட கிளைகள் நிறுவப் போவதாகவும் தெரிவித்தார்.

இதில் தேசிய துணைத் தலைவர் பிலால் ஹாஜியார், சென்னை மாவட்ட தலைவர் முஹம்மத் ஹுசைன் சென்னை மாவட்ட செயலாளர் தாஹிர், மாநில செயலாளர் ஜமால் மற்றும் முஹம்மத் முபாரக் கலந்து கொண்டனர்.

source:Twocircles

8/10/09

இஸ்ரேல் மீதான போர் குற்ற நடவடிக்கை நிறுத்தம் : அப்பாசுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

0 கருத்துகள்
காஸா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் ஏராளமான போர்க் குற்றங்கள் புரிந்தது தொடர்பாக இஸ்ரேல் மீது மேற்கொள்ளவிருந்த நடவடிக்கைகளை நிறுத்த ஃபலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அவர் ஒரு பலஸ்தீனியரே அல்ல என்று ஹமாஸ் அப்பாஸை கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது இம்மாத இறுதியில் மேற்குலகால் ஆதரிக்கப்படும் அப்பாஸுக்கும் போராளிகளான ஹமாஸுக்கும் இடையில் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் எனத் தெரிகிறது.
காஸாவில் கடந்த குளிர் காலத்தில் நடைபெற்ற 3 வார போரின் போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரும் போர்க் குற்றங்களை புரிந்ததாக ஐ.நா குழு புகார் கூறியது. எனினும் இரு தரப்பினரும் அதை மறுத்துள்ளனர்.
பாலஸ்தீன அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா மனித உரிமைக் குழு இஸ்ரேலின் போர்க் குற்றங்களை விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது நடவடிக்கைக்காக ஐ.நா பொதுக் குழுவுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டியதற்குப் பதிலாக அப்பாஸின் தலைமையிலான பலஸ்தீன அரசின் கோரிக்கையை ஏற்று ஓட்டெடுப்பை 6 மாதம் தள்ளிப் போட்டுள்ளது.
அப்பாஸின் ஃபதாஹ் இயக்கத்தை சார்ந்த சட்டப் பிரதிநிதி அப்துல்லா இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது சில நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது அமெரிக்க அராசாங்கத்தின் நெருக்குதலால் எடுக்கப்பட்ட முடிவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த வாரம் போர்க் குற்றம் தொடர்பாக இஸ்ரேல் மீது எடுக்கப்படும் எவ்வித நடவடிக்கையையும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.அப்பாஸின் இம்முடிவு பலஸ்தீன மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பாஸ் மேற்கொள்ளவிருந்த சிரியா பயணத்தை ஒத்தி வைக்குமாறு சிரியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து காஸாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூது ஜாஹர் “இனியும் அப்பாஸை பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாகக் கருதமுடியாது. பலஸ்தீனராகக்கூட அவரைக் கருத முடியாது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
source:inneram

சவூதியில் தொலைக்காட்சியில் காம அனுபவங்களைப் பேட்டியளித்தவருக்கு 1000 சவுக்கடி, ஐந்து ஆண்டு சிறை

0 கருத்துகள்
தனது காம சல்லாப அனுபவங்களை வெளிப்படையாய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சவூதி நாட்டைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவருக்கு ஆயிரம் கசையடியும், ஐந்து வருட சிறைத் தண்டனையும் அளித்து சவூதி நாட்டு நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மற்ற மூன்று நபர்களுக்கும், முறைகேடான காம சங்கதிகளை பகிரங்கமாய் பேசியதால் 300 கசையடிகளும் இரண்டு வருட சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
LBC எனப்படும் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் "Bold Red Line" எனப்படும் நிகழ்ச்சியொன்றில் சவூதியைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரின் காம சல்லாப அனுபவங்களின் வெளிப்படையான பேட்டியை ஜூலை 15 ஒளிபரப்பியிருந்தது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சவூதி மக்களிடையே இது பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சவூதி அரேபியாவில் தனிநபர் ஒழுங்கு, மதம் சார்ந்த வரையறைக்குட்பட்டது. உறவுமுறை தொடர்பல்லாத ஆண்களும் பெண்களும் சமமாய் கலந்து பழகவே வரம்புகள் உள்ள நிலையில் இத்தகைய பேட்டி பெருத்த சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் மேற்சொன்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்துல் ஜவாத் சார்பாய் வாதாடிய வழக்கறிஞர் சுலைமான அல் ஜுமை (Sulaiman al-Jumeii) தனது கட்சிக்காரர் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
source:inneram

7/10/09

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை:மத்திய அமைச்சர் சசி தரூர் மழுப்பல்

0 கருத்துகள்
பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களின் விபரங்களை பதிவுச்செய்வதிலுள்ள இடையூறே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு தடையாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் துபாயில் நடைபெற்ற நேரடி சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கூறினார்.

மேலும் இது வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்டதல்ல எனவும் ஆனாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

துபாய்க்கு சுற்றுபயணம் வந்த அமைச்சரை திருவனந்தபுரம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடுச்செய்திருந்த நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சமீபத்தில் பல்வேறு வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் பலர் வேலைஇழந்து நாடு திரும்புவது கவலையளிப்பதாக சசி தரூர் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் வேலையிழந்தோருக்கு புணர்வாழ்வு திட்டங்களுக்காக கோரிக்கைகள் பல எழுந்தன. இது சம்பந்தமாக தான் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியதாகவும், மேலும் பட்ஜெட்டில் இதற்கான தொகை ஒதுக்கவேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தபொழுது பதிலளித்த நிதியமைச்சர் இதுக்கான நிதி ஒதுக்கக்கூடிய சூழல் ஏற்படவில்லையெனவும், அதற்கான அவசியமும் இல்லையெனக்கூறிய நிதி அமைச்சர், வளைகுடா நாடுகளில் வேலையிழந்து திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களுக்கான புணர்வாழ்வு நிதியை மாநில அரசுகளே ஒதுக்கமுடியும் என்று கூறியதாக சசிதரூர் தெரிவித்தார்.

ஹஜ் செல்லுவோருக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தல்மீஸ் அஹ்மத்,துபாய் இந்திய தூதரக அதிகாரி வேணு ராஜாமணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.பல்வேறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அமைப்பின் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

செய்தி:தேஜஸ்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி மூட்டையாம் - போலீஸ்

0 கருத்துகள்
மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.
இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.
இந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன் லோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.
முதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.
இன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
மொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.
முன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
thatstamil

6/10/09

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல்,இல்லாத கேப்டன் ஷர்மா! நடந்தது என்ன?

0 கருத்துகள்
மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திடம் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கேப்டன் R.K.ஷர்மா என்று யாரையும் தெரியாது என்று கூறியுள்ளனர்.

இந்த கேப்டன் R.K.ஷர்மா தலைமையிலான ஒரு தேசிய பாதுகாப்பு படை பிரிவு ஹோட்டல் ஓபராயில் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றதாக சிறப்பு நீதி மன்றத்திடம் ஒரு சாட்சி கூறியுள்ளார்.
நீதி மன்றம் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த கேப்டன் ஷர்மாவை நீதி மன்றத்திற்கு அழைத்து இந்த சம்பவம் குறித்து மேலும் விபரங்கள் தருமாறு கோரியது. இந்த கேப்டன் ஷர்மா குறித்து பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் கடம் நீதி மன்றத்தில், தான் கேப்டன் ஷர்மா தலைமை தாங்கிய குழுவில் இருந்ததாகவும், இந்த குழு தான் ஹோட்டல் ஓபராயில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை மும்பையின் குற்றப் பிரிவிடம் தங்களிடம் எந்த ஒரு கேப்டன் ஷர்மாவும் கிடையாது என்று விளக்கமளித்து ஒரு கடிதத்தை சமர்பித்துள்ளது.
இதனை பெற்றுக்கொண்ட நீதிபதி தஹாலியானி இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி ரமேஷ் மகாலேயிடம் அந்த தீவிரவாதியைக் கொன்றது யார் என்று விசாரிக்க ஆணையிட்டார்.

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும் ATS இன் முன்னாள் தலைவர் மற்றும் இந்த தாக்குதலில் நம் நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்த ஹேமந்த் கார்கரேவின் மரணம் குறித்தும் நமக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கும் நிலையில் இந்த கேப்டன் ஷர்மா என்ற ஒரு புதிய கதாபாத்திரம் இன்னும் அதிக குழப்பத்தை தருகிறது. இந்த வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா இல்லை வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டை மற்றும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பித்து விடுவார்களா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
source:indian express,thapalpetti

சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி - பலர் காயம்

0 கருத்துகள்
மதுரை: மதுரை அருகே உள்ள சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று மாலை குண்டு வெடித்தது. இதில் 4 பேர் பலியானார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.

மதுரை, திண்டுக்கல் இடையே உள்ள ஊர் சோழவந்தான். இங்குள்ள ரயில் நிலையத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு ஈரோடு - நெல்லை ரயில் வந்து நின்றது.வந்து நின்று சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. வெடித்த வேகத்தில் அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 ஆண்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ரயில் நிலையத்தின் மேற்கூரை நாலாபக்கமும் சிதறி நொறுங்கி விழுந்தது.


பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஈரோடு - நெல்லை ரயிலில் இருந்த பயணிகள், ரயிலிலிருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.குண்டுவெடிப்பில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்கள் மூலம் போலீஸார், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


குண்டுவெடிப்பால் சோழவந்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் படையினர் அங்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரயில்வே நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது கிணறு தோண்ட அல்லது குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா என்று தெரியவில்லை.


காவல்துறை தரப்பில் கூறுகையில், என்ன மாதிரியான குண்டுவெடிப்பு என்று விசாரணைக்குப் பின்னர்தான் தெரிய வரும். இருப்பினும் தீவிரவாத செயலாக இது இருக்க வாய்ப்பில்லை என்றனர். குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் வந்து நின்ற நெல்லை பாசஞ்சர் ரயிலில் குண்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த ரயிலை நிலையத்திலிருந்து கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.


குண்டுவெடிப்பு காரணமாக மதுரை-திண்டுக்கல் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிந்து இன்று பிற்பகல் மதுரைக்குக் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ரயில்வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சோழவந்தான் விரைந்துள்ளனர்.
thatstamil

5/10/09

கால்பந்து திருடினான் என்ற குற்றச்சாட்டிற்க்காக விசாரணையின்றி 6ஆண்டுகள் சிறையிலிருக்கும் மாணவன்

0 கருத்துகள்
பெங்களுர்: கால்பந்து ஒன்றை திருடினான் என்ற குற்றச்சாட்டிற்க்காக விசாரணையின்றி மாணவன் ஒருவன் 6ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டு கிடக்கிறான்.அவனை வெளியே கொண்டுவர மனித உரிமை கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் அக்ரம் பாஷா(12) அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த ம் ஆண்டு பள்ளியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்து கால்பந்து ஒன்று காணமல் போனது. இதையொட்டி அக்ரம் பாஷா மீது பள்ளி நிர்வாகத்தால் தும்கூரில் உள்ள திலக்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசாரால் அக்ரம் கைது செய்யப்பட்டு தும்கூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். அவனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை அவர்களுக்கென்று உள்ள சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் அக்ரம் விஷயத்தில் அவனை நேராக பெங்களூர் கொண்டுவந்து பரப்பன அக்ரகாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.
6ஆண்டுகள் சிறைவாசம்
அதன் பிறகு அவன் மீதான விசாரணை கோர்ட்டுக்கு வரவே இல்லை. இப்படி எவ்வித விசா௦ரணையும் இல்லாமல் அக்ரம் பாஷா ஆண்டுகளாக சிறைப்பறவையாக இருந்து வருகிறான். 12வயதில் சிறைக்குத் தள்ளப்பட்ட அக்ரம் பாஷாவுக்கு தற்ப்போது 18வயது ஆகிறது. அவனது வழக்கை ஏற்று நடத்த யாருமே முன்வரவில்லை.
இந்நிலையில் அக்ரம் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதன் பிறகு இவ்வழக்கு இளம் குற்றவாளிகளுக்கான நீதிமன்ற வாரியத்தின் பரீசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த வாரியம் அக்ரமை ரூ 3ஆயிரத்துக்கு ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. என்றாலும் அவனால் விடுதலை ஆகமுடியவில்லை. காரணம் அவன் மீதான வழக்கு விசாரணை விரைவில்(6ஆண்டுகளுக்குப்பின்) தொடங்க இருக்கிறது.
மனித உரிமை கமிஷன்
எந்த விசாரணையும் இல்லாமல் சிறைவாசகம் அனுபவித்து வரும் அக்ரம் பாஷாவுக்கு உதவ 'சிக்ரம்' என்ற சமூக சேவை அமைப்பும்,கர்நாடக மாநில மனித உரிமை கமிஷனும் முன்வந்துள்ளன. அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் வகையில் அவனது வழக்கை ஏற்று நடத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கவே ஆண்டுகள் என்றால்,வழக்கு முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமோ???....

காஷ்மீருக்கு தனி தூதர்-இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

1 கருத்துகள்
டெல்லி: காஷ்மீருக்கு தனி தூதரை நியமித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளின் அரசியல், சமுதாயம் மற்றும் பொருளாதாரம் குறித்த விவகாரங்களை கவனித்து வரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, சவுதி அரோபியாவை சேர்ந்த அப்துல்லா பின் அப்துர் ரஹ்மான் என்பவரை காஷ்மீருக்கான தனி தூதராக அறிவித்தது.
இஸ்லாமிய கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இது போன்ற முடிவு எடுப்பது இது தான் முதல் முறை. இதற்கு பாகிஸ்தானின் தூண்டுதலே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் டெல்லியில் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு தலையிடுவது கண்டிக்கதக்கது. இதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அந்த தூதரின் நியமனத்தை இந்தியா நிராகரிக்கிறது.

காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அவர்கள் நினைத்து பார்க்க தவறிவிட்டனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தி்ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹுரியத் மாநாடு அமைப்பு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் இதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு எடுத்துள்ள இந்த முடிவை ஆரோக்யமானதாக கருதுகிறோம். முஸ்லிம் நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்.
source: thatstamil

குத்துச்சண்டையில் ஹிஜாப் - IBA

0 கருத்துகள்
குத்துச்சண்டையில் உலக சாம்பியன் பட்டம் வழங்கும் சர்வதேச குத்துச்சண்டை கழகம் (International Boxing Association) 2012 ஒலிம்பிக்கில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபுடன் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
IBA வின் செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், "இஸ்லாமிய பெண்கள் அவர்களுக்குரிய முழு ஹிஜாப் அணிய தற்ப்பொழுது எந்த தடையுமில்லை" என்று கூறினார்.
2012 ல் லண்டனில் நடக்கூடிய ஒலிம்பிக்கில் தான் பெண்கள் முதன் முறையாக ஒலிம்பிக்கின் பட்டியலின் கீழ் குத்துச்சண்டை போட்டியில் மோதுகிறார்கள்.
சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு கூறியதாவது, "இந்த போட்டியில் பெண்கள் மூன்று பிரிவுகளில் மோதுவார்கள், Flyweight (48 - 51kg), Lightweight (56 - 60kg) மற்றும் Middleweight (69 - 75kg). இதில் ஒவ்வொரு பிரிவிலும் 12 வீராங்கனைகள் பங்கெடுத்துக்கொள்வார்கள்" என்று தெரிவித்தது.
இஸ்லாமிய நாடுகள் பல தங்கள் நாட்டிலிருந்து இந்த போட்டிக்கு வீராங்கனைகளை ஹிஜாபுடன் அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இஸ்லாம் ஹிஜாபை கட்டாயமாக கடைப்பிடிக்கக்கூடிய ஒன்றாக கருதுகின்றது. மாறாக ஹிஜாப் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது அல்ல.
IBA வின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டாயமாக, மத தேவைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் இதனை அனுமதித்துள்ளோம்" என்று கூறினார்.
விளையாட்டில் ஹிஜாப் என்பது மேற்குலகில் சமீபகாலமாக தான் மக்களின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி அமெரிக்க உயர்நிலைப்பள்ளி நட்சத்திர ஓட்டக்காரர் ஹிஜாப் அணிந்ததற்காக அவருடைய பகுதியில் நடந்த போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட வில்லை.

ஹிஜாப் அணிந்ததற்காக கனடா நாட்டைச்சேர்ந்த 11 வயது சிறுமி தேசிய ஜூடோ விளையாட்டு பந்தயத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

2007 மார்ச்சில் சர்வதேச கால்பந்து கழகம் International Football Association Board (IFAB) கால்பந்து விளையாட்டுகளில் ஹிஜாபை தடை செய்தது.

இன்று
ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணிந்து விளையாடப் போகும் மங்கையர் குழு ஒன்று 2012 ஒலிம்பிக் போட்டிக்காக தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றது.
ஆப்கானின் தேசிய மகளிர் குத்துச்சண்டை குழுவில் மொத்தம் 25 வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள் 14 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்கள் ஆப்கானின் ஒலிம்பிக் மைதானத்தில் இந்த குத்துச்சண்டை போட்டிக்காக கடும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
2008 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், அல் கசரா என்ற பஹ்ரைன் வீராங்கனை 200 மீடர் ஓட்டப்பந்தயத்தில் ஹிஜாப் அணித்து பங்கெடுத்து வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

source: Islamonline,thapalpetti